INDIAN TOILET BENEFITS: குந்துதல் முறையில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சூப்பர் தகவல் !!

Photo of author

By Divya

INDIAN TOILET BENEFITS: குந்துதல் முறையில் மலம் கழிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு சூப்பர் தகவல் !!

நம் தாத்தா பாட்டி காலத்தில் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் பழக்கம் இருந்தது.பெரும்பாலான கிராமங்களில் திறந்த வெளிகளில் மலம் கழிக்கும் பழக்கம் தொடர்வதால் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசு கழிப்பறை குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் தொடர்ந்து ஏற்படுத்தி வருகிறது.

இதனால் இந்தியாவில் கழிப்பறை பயன்பாடு மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.நம் இந்தியாவில் இரண்டு விதமான கழிப்பறைகளை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.இந்திய கழிப்பறை மற்றும் வெஸ்டன் கழிப்பறை.

இன்று கட்டப்படும் பெரும்பாலான வீடுகளில் வெஸ்டன் கழிப்பறை தான் உள்ளது.ஆனால் வெஸ்டன் கழிப்பறை கழிப்பறையை விட இந்தியன் கழிப்பறையால் பல நன்மைகள் கிடைக்கும் என்பது பலருக்கும் தெரிவதில்லை.

இந்தியன் கழிப்பறையை பொறுத்தவரை மலம் கழிக்க குந்துதல் முறையில் தான் உட்கார வேண்டும்.இந்த குந்துதல் முறை நம் உடலுக்கு நல்ல உடல்பயிற்சி தருபவையாக உள்ளது.இந்த குந்துதல் விதம் நம் உடலில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.மூட்டுகளுக்கு நல்ல வலிமை கொடுக்கிறது.

குந்தும் பொழுது உங்கள் வயிறு அழுத்தப்படும்.இதனால் செரிமான மாண்டலம் மேப்படும்.மலச்சிக்கல் பிரச்சனையை இந்த குந்துதல் முறை போக்குகிறது.கர்ப்பிணி பெண்கள் குந்துதல் முறையில் மலம் கழிப்பதினால் அவர்களுக்கு சுகப் பிரசவமாக அதிக வாய்ப்பு இருக்கிறது.குந்துதல் முறையில் மலம் கழித்ததால் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவது தடுக்கப்படுகிறது.தினமும் குந்துதல் முறையில் மலம் கழித்து வந்தால் உடல் சீராக இயங்கும்.