அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

Photo of author

By Pavithra

அமெரிக்கா தேர்தலில் இந்தியர் போட்டியிடுகிறார்

Pavithra

அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் நடக்க இருக்கிறது.அதில் குடியரசு கட்சி சார்பில் அதிபராக இருந்த டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார்.அவரை எதிர்த்து ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடென் போட்டியிடுகிறார்.

அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என அதிபர் வேட்பாளர் ஜோ பிடென் அறிவித்துள்ளர். அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்க இருக்கிறது. தற்போது ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடேன் இந்த தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என ஜோ பிடென் மக்களிடையே கூறியுள்ளார். இதற்காக அவர் தீவிர பிரச்சாரதை மேற்கொண்டு வருகிறார். அதேசமயம் தன்னுடன் இணைந்து துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் நபரை தேர்வு செய்வதில் தீவிரம் காட்டி வந்தார் ஜோ பிடென். இதன் கிடையே, இந்திய வம்சாவளியை சேர்ந்த கலிஃபோர்னியா செனட் சபையை செர்ந்த உறுப்பினர் கமலா ஹாரிஸ் அவர்களை துணை அதிபர் பதவிக்கு போட்டியிடுவார் என ஜோ பிடென் அறிவித்துள்ளார் . அவரின் ட்விட்டர் பக்கத்தில் இந்த செய்தியை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தினார்.