இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

Photo of author

By Rupa

இந்தியர்கள் இங்கு செல்ல தடை! கொரோனா அச்சுறுத்தல்!

கொரோனா தொற்றானது ஓராண்டு காலமாக மக்களை பாதித்து வருகிறது.தற்போது கொரோனாவின் 2 வது அலையானது மக்களை பெரிதளவு பாதித்துள்ளது.முதல் அலையை விட 2 வது அலை தீவிரமாக பரவி வருகிறது.இந்நிலையில் மக்களை பேணிகாக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் பல வித தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.அந்தவகையில் முதலில் முகக்கவசம் அணியாதவர்கள்,எச்சில் துப்புபவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதித்தனர்.

அதனையடுத்து கொரோனா தொற்று அதிக அளவு பரவியதால் தமிழ்நாட்டில் சிறிது கட்டுப்பாடுகளை அமல்படுத்தினர்.ஆனால் தமிழ்நாட்டை தவிர்த்து இதர மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கையே அமல்படுத்தினர்.அந்த பட்டியலில் முதலில்,மகாராஷ்டிராவில் இரவு ஊரடங்கு எனத்தொடங்கி தற்போது முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.அதனையடுத்து டெல்லியில் அதிக அளவு தொற்று பரவி வருவதால் தற்போது அம்மாநிலத்திலும் முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளனர்.

இவ்வாறு ஒவ்வொரு மாநிலங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் தற்போது இந்தியா உலகளவில் கொரோனா தொற்றின் பாதிப்பில் நான்காவது இடத்திலிருந்தது தற்போது இரண்டாவது இடத்திற்கு வந்துள்ளது.அக்காரணத்தினால் பல அண்டை நாடுகள் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வர கூடாது என ஆணை பிரபித்தனர்.அந்தவகையில் நியூசிலாந்து,ஹாங்காங்,இங்கிலாந்து மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள் இந்தியர்கள் அவர்கள் நாட்டிற்கு வருவதை தடை விதித்துள்ளது.

அதனையடுத்து சிங்கப்பூரிலும் இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வந்தால் 21 நாட்கள் தனிமை படுத்திய பிறகே வெளியே செல்ல வேண்டும் என்று புதிய வழிமுறையை அமல்படுத்தினர்.இவ்வாறு பல நாடுகள் கூறி வரும் நிலையில் தற்போது இலங்கையும் தங்கள் நாட்டிற்கு இந்தியர்கள் வர தடை விதித்துள்ளனர்.நாளுக்கு நாள் கொரோனாவின் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருகிறது.இதனைக்கட்டுப்படுத்த மக்கள் தேவையான காரியங்களுக்கு மட்டும் வெளியே செல்ல வேண்டும்.அவ்வாறு செல்லும் போது தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என அரசாங்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.