இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

0
174
Indians Information theft from Whats App-News4 Tamil Latest Technology News in Tamil Today
Indians Information theft from Whats App-News4 Tamil Latest Technology News in Tamil Today

இந்தியாவில் வாட்ஸ் ஆப் தகவல்கள் திருடப்பட்டதா? வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம்

இந்தியாவில் வாட்ஸ் ஆப் பயன்படுத்திவரும் நபர்களின் தகவல்கள் திருடப்பட்டதா என்பது பற்றி வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இதில் ஏற்கனவே இது பற்றி அரசுக்கு தகவல் தெரிவித்ததாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

இந்தியாவில் வசிக்கும் பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக வாட்ஸ் ஆப் நிறுவனம் அது பற்றி முறையான விளக்கம் அளித்துள்ளது.

இதில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டது என்ற தகவல்களை கடந்த மே மாதமே மத்திய அரசுக்கு தெரிவித்து விட்டதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய சைபர் தாக்குதல் தடுப்பு அமைப்பான சி.இ.ஆர்.டி.-விடம் உளவு பார்க்கப்பட்ட தகவல்களை கூறியதாகவும் வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால் ‘பெகாசஸ்’ என்ற மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்டதையோ, எந்த வகையில் தகவல்கள் திருடப்பட்டன என்பது பற்றியோ இதில் எதுவும் கூறவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விளக்கம் அளித்துள்ள வாட்ஸ் ஆப் நிறுவனம் தனி நபர்களுக்கு வரும் தகவல்களை பாதுகாப்பதற்கே முன்னுரிமை தருவோம் என்றும் உறுதி அளித்துள்ளது.

உளவு பார்த்தது பற்றிய தகவல் தெரிந்த உடனேயே உளவு பார்க்க பயன்படுத்திய அந்த மென்பொருளை தயாரித்த என்.எஸ்.ஒ. நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளதாக வாட்ஸ் ஆப் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள நீதிமன்றத்தில் இது குறித்து தொடர்ந்துள்ள வழக்கில் 20 நாடுகளில் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டுள்ளதாகவும் வாட்ஸ் ஆப் தெரிவித்துள்ளது.

நாட்டின் குடிமக்களின் தனியுரிமை பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம் என்ற இந்திய அரசின் உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். சைபர் தாக்குதல் நிகழ்த்தியவர்களுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து வாட்ஸ் ஆப் பயனாளர்களின் தகவல்களையும் பாதுகாக்க வாட்ஸ் ஆப்  நிறுவனம்உறுதி பூண்டுள்ளது” என வாட்ஸ் ஆப் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

Previous articleஇந்தியா-வங்காளதேசம் இடையேயான கிரிக்கெட்: ரசிகர்கள் சுவாச கவசம் அணிந்து வர அறிவுறுத்தல்! நடந்தது என்ன?
Next articleஇங்கிலாந்தில் தடை விதிக்கப்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதா? தமிழகத்தைப் பாலைவனமாக்கும் மத்திய அரசின் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்! மருத்துவர் ராமதாஸ்