இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (Q1) வளர்ச்சி! எதிர்பார்ப்புகளை மீறிய உயர்வு

0
106
India's first quarter (Q1) growth data for the financial year 2025-26
India's first quarter (Q1) growth data for the financial year 2025-26

இந்தியாவின் GDP 7.8% உயர்வு, எதிர்பார்ப்புகளை மீறி உயர்ந்துள்ளளது.

இந்தியாவின் 2025-26 நிதியாண்டு முதல் காலாண்டு (ஜூன் 30, 2025 முடிவடைந்த காலாண்டு) மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8% வளர்ச்சி கண்டுள்ளது என்று ஆகஸ்ட் 29 அன்று வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலான நிபுணர்கள் 6.5%–7% வளர்ச்சியை மட்டுமே கணித்திருந்த நிலையில், இது அனைத்து எதிர்பார்ப்புகளையும் மீறியுள்ளது.

கடந்த ஆண்டு அதே காலாண்டில் 6.5% வளர்ச்சியும், முந்தைய காலாண்டில் (Q4 FY25) 7.4% வளர்ச்சியும் இந்தியா கண்டது.

அரசு அறிக்கை:
“2024-25 முதல் காலாண்டில் 6.5% இருந்த வளர்ச்சி விகிதத்தை விட, 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் உண்மையான GDP 7.8% உயர்ந்துள்ளது” என்று புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

  • உண்மையான GDP (நிலையான விலை அடிப்படையில்):
    ₹47.89 லட்சம் கோடி (Q1 FY26) vs ₹44.42 லட்சம் கோடி (Q1 FY25)

  • நாமினல் GDP (பணவீக்கம் உட்பட):
    8.8% வளர்ச்சி

GVA (மொத்த மதிப்பு கூட்டல்) வளர்ச்சி:
சேவைத் துறை முன்னேற்றத்தால், உண்மையான GVA வளர்ச்சி விகிதம் 7.6% ஆக உயர்ந்துள்ளது.

  • Q1 FY26: ₹44.64 லட்சம் கோடி

  • Q1 FY25: ₹41.47 லட்சம் கோடி

நாமினல் GVA:

  • Q1 FY26: ₹78.25 லட்சம் கோடி

  • Q1 FY25: ₹71.95 லட்சம் கோடி (8.8% உயர்வு)

துறைகள் வாரியான வளர்ச்சி

  • விவசாயம் மற்றும் இணைந்த துறைகள்: 3.7% (Q1 FY25 இல் 1.5% இருந்தது)

  • இரண்டாம் நிலைத் துறைகள் (உற்பத்தி, கட்டுமானம்):

    • உற்பத்தி – 7.7%

    • கட்டுமானம் – 7.6%

    • சுரங்கம் மற்றும் குவாரி – -3.1%

    • மின்சாரம், எரிவாயு, தண்ணீர் போன்ற உபயோக சேவைகள் – 0.5%

  • மூன்றாம் நிலை (சேவைத் துறை): 9.3% (கடந்த ஆண்டு 6.8%)

செலவுகள் மற்றும் முதலீடுகள்

  • அரசு இறுதி நுகர்வு செலவினம் (GFCE):
    9.7% (Q1 FY26) vs 4.0% (Q1 FY25)

  • தனியார் இறுதி நுகர்வு செலவினம் (PFCE):
    7.0% (Q1 FY26) vs 8.3% (Q1 FY25)

  • மொத்த நிலையான மூலதன உருவாக்கம் (GFCF):
    7.8% (Q1 FY26) vs 6.7% (Q1 FY25)

Previous articleமுதலீட்டாளர்களுக்கு பொன்னான வாய்ப்பு: ஜியோ IPO வரவிருப்பதை அறிவித்தார் அம்பானி!!
Next articleதமிழகத்தை விட்டு வெளியேறும் அண்ணாமலை!! மத்தியிலிருந்து வந்த அதிரடி உத்தரவு!!