உலகிலேயே அதிகமான இந்தியாவின் மொத்த கடன் தொகை!!: பொதுமக்களுக்கு விதிக்கப்படும் வரி குறித்த அறிக்கையால் அச்சம்!!

0
134

2021 இல் உலகிலேயே மிகப்பெரிய கடனாளி நாடாக இந்தியா இருக்கும் என பொருளாதாரத் தர மதிப்பீட்டு நிறுவனமான மூடீஸ் என்ற அமைப்பு இந்த அதிர்ச்சித் தகவலை தெரிவித்துள்ளது.

கரோனா பெருந்தொற்று, பொது முடக்கம் காரணமாக வேலை இழப்பினாலும், நிறுவனங்கள் முடக்கத்தாலும் உலகில் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளது. இதில் குறிப்பாக, மொத்த இந்தியாவின் பொருளாதார வீழ்ச்சியானது -29% அளவிற்கு வரலாறு காணாத நிலையில் அதல பாதாளத்திற்கு சென்றுள்ளது.

India's highest total debt in the world !!: Public fear of tax report !!
India’s highest total debt in the world !!: Public fear of tax report !!

 

இது உலகிலேயே  இந்தியாவின் பொருளாதாரம், நாட்டின் மொத்த உற்பத்தி  அதிகமாக வீழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த கொடுமையான நிலையில், இந்த தகவல் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “இந்தியா,பிரேசில், தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகள் வளர்ந்து வரும் பெரிய நாடுகள் பட்டியலில் உள்ளன.

 

ஆனால், இந்த நாடுகளின் கடன் 2019 ஆம் ஆண்டின் அளவைவிட 2021 ஆம் ஆண்டின் முடிவில் சராசரியாக 10% வரை அதிகரிக்கலாம் என்று மூடிஸ் நிறுவனம் குறிப்பிட் டுள்ளது.

India's highest total debt in the world !!: Public fear of tax report !!
India’s highest total debt in the world !!: Public fear of tax report !!

 

இவற்றில் சில நாடுகள் ஏற்கனவே அதிக கடன் வாங்கி இருப்பதால் அதிக வட்டி செலுத்த வேண்டி வரலாம், இதனாலும் கடன் மேலும் அதிகரிக்கலாம் என்று மூடீஸ் அமைப்பு தெரிவித்திருக்கிறது.

 

2021 ஆம் ஆண்டுவாக்கில் பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளின் கடன் சுமையானது வளரும் நாடுகளிலேயே அதிகமாக இருக்கும். ஏனென்றால் இந்தியா, மெக்சிகோ, தென் ஆப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளில் நிதித்துறை பலவீனமாக இருப்பதே காரணமாகும்.

 

இந்நிலையில், இந்தியாவில் வேலையின்மை மற்றும் பொருளாதார சீர்குலைவு அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் நகர்ப்புற வேலை வாய்ப்பின்மையானது 10% ஆக அதிகரித்துள்ளதாக இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

India's highest total debt in the world !!: Public fear of tax report !!
India’s highest total debt in the world !!: Public fear of tax report !!

 

இந்தியாவில் மட்டும் ஜனவரியில் 7.22 சதவீதமும், பிப்ரவரியில் 7.26 சதவீதமுமாக இருந்த வேலையின்மையானது, மார்ச் மாதம் கொரோனா நோய்த் தொற்றுக்குப் பின்னர் தொழில் துறைக்கு ஏற்பட்ட மோசமான பாதிப்பினால்,

 

அதன்பிறகு சமீபத்தில் இந்த வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க துவங்கியது. ஜூலை மாதத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை முறையான துறையில் (formal sector) 9.15 சதவீதமாக இருந்தது. இது ஆகஸ்ட் மாதத்தில் 9.83 சதவீதமாக அதிகரித்துள்ளது.

 

மேலும், கிராமப்புறத்தில் ஜூலை மாதம் 6.67% ஆக இருந்த வேலை இன்மை ஆகஸ்டில் 7.75% ஆக அதிகரித்துள்ளது. ஒட்டுமொத்தமாக வேலையின்மை ஜூலையில் 7.43% விருந்து 8.35% ஆக உயர்ந்துள்ளது.

 

வேலையின்மையால் ஹரியானா 33.5 சதவீதத்துடனும், திரிபுரா 27.9 சதவீதத்துடனும் நாட்டிலேயே மிகக் கடுமையாக பாதிப்பை சந்தித்துள்ளது மாநிலங்களாக உள்ளன.

 

இதனால் மேலும், இந்தியாவின் மொத்த கடன் சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மூடிஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த கடன் சுமையானது இந்திய மக்களின் சராசரி வாழ்க்கையை மிகவும் பாதிக்கும் என அந்த அமைப்பினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleஇந்தியாவில் முதன் முதலாக ஒரே நாளில் 86 ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு!
Next articleகுறுங்குடி பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர்களுக்காக மு.க ஸ்டாலின் அதிரடி கோரிக்கை: நிறைவேற்றுமா அரசு?