இந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 

0
145

லடாக் எல்லையில் கால்வன் பள்ளத்தாக்கில் நேரிட்ட மோதலால் இந்தியா, சீனா இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்நிலையில் இமாச்சல பிரதேச மாநிலம், கின்னோர் மாவட்டம் சாரங் கிராமத்தை சேர்ந்த 9 பேர், இந்தோ -திபெத் எல்லை காவல் படையினருடன் சீன எல்லைக்கு அண்மையில் சென்றிருந்த போது இந்தியாவை நோக்கி புதிய சாலையை சீனா மிக வேகமாக கட்டமைத்தது தெரிய வந்ததாக அவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த அக்டோபர் மாதத்தில் சாலை இல்லாத நிலையில், தற்போது மிக வேகமாக சீனா சாலையை கட்டமைத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். எனினும் அதை மறுத்துள்ள கின்னோர் மாவட்ட நிர்வாகிகள், எல்லை பகுதி மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக கூறியுள்ளனர்.

இமாச்சல பிரதேச மாநிலம் சுமார் 260 கி.மீ. தூரம் சீனாவுடனான எல்லையை 140 கிமீ தூரம் கின்னோர் மாவட்டத்தில் கொண்டு உள்ளது. லடாக் மோதலை அடுத்து 2 நாடுகளுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில், எல்லையில் சீனா புதிய சாலையை கட்டமைத்து வருவது மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleசொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி
Next articleநாளை மறுநாள் முதல் உணவகங்களில் உணவு உண்பதற்கும் தடை