சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி

0
188

மலேசியாவில் ஹஜ்ஜுப் பெருநாளை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு செல்ல மக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முக்கியமான சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள் தற்காலிகமாக அகற்றப்படும் என்றும் அதன் மூலம் உள்நாட்டு பயணங்கள் எளிமையாக இருக்கும் என்றும் மூத்த அமைச்சர் இஸ்மாயில் சாப்ரி யாக்கோப் தெரிவித்துள்ளார். இருப்பினும், COVID-19 நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதன் தொடர்பில் நடைமுறைப்படுத்தப்படும் விதிகளைப் பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பெருநாள் கொண்டாட்டத்தின் போது வீட்டில் விருந்தினர்கள் 20 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. வீட்டில் தனிமை படுத்தப்பட்டுள்ளவர்கள் எங்கும் பயணம் செய்யக்கூடாது, விருந்தினர்களை அழைக்கவும் கூடாது. கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகொரோனா நோய்ப்பரவல் எப்போது உச்சத்திற்குச் செல்லும் கணிக்க முடியவில்லை – விஞ்ஞானிகள்
Next articleஇந்திய பகுதியை தொடர்ந்து ஆக்கிரமிக்கும் சீனா! இரு நாட்டுக்கு இடையே மீண்டும் மோதல் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here