நாட்டில் 2000ஐ நோக்கி சென்று கொண்டிருக்கும் ஒமைக்ரான் நோய் தொற்று பாதிப்பு!

Photo of author

By Sakthi

நாட்டில் கடந்த மாதம் இரண்டாம் தேதி புதிய வகை நோய்த்தொற்றான ஒமைக்ரான் நோய் தொற்று ஊடுருவியது தொடர்ந்து நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வருகிறது. பல மாநிலங்களிலும் பல விதமான கட்டுப்பாடுகளை அதிகரித்து வந்தாலும், இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. நேற்று காலை நிலவரத்தின் அடிப்படையில் இந்த புதிய வகை வைரஸ் நாட்டின் 23 மாநிலங்களில் பரவி உள்ளது. 1892 பேர் இதனால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 766 பேர் குணமடைந்து விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையை மராட்டிய மாநிலம் கொண்டு இருக்கிறது, அதற்கு அடுத்தபடியாக டெல்லி இருக்கிறது. இதனை தொடர்ந்து கேரளா, ராஜஸ்தான், குஜராத், உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன. இந்த சூழ்நிலையில், ஒடிசாவில் பூரியில் இருக்கின்ற விடுதி ஒன்றில் நேற்று 3 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.

மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்த சுற்றுலா பயணிக்கு மற்றும் ஹோட்டல் பணியாளர்கள் இரண்டு பேருக்கும், என்று இந்த நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து ஓட்டல் நுண் கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, அந்த ஓட்டலுக்குள் யாரும் நுழைய இயலாது, அதேபோல அந்த ஓட்டலுக்குள் இருப்போர் வெளியே வரவும் இயலாது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் 18 பேருக்கு இந்த புதிய வகை வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது, இதனால் அங்கே இந்த நோய் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்திருக்கிறது. ஆகவே இந்தியாவில் இந்த புதிய வகை நோய் தொற்று பாதிப்பு 2000 என்ற எண்ணிக்கையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.