இந்தியாவின் அரையிறுதியை எட்டா கனியாக்கிய நியூசிலாந்து! 8 கேட்ச்களை தவற விட்ட பாகிஸ்தான் !

Photo of author

By Rupa

பெண்களுக்கான டி20 உலககோப்பை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதில் நேற்று நடந்த நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியினை நியூசிலாந்து பாகிஸ்தான் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர்.  ஏனெனில் இந்த போட்டியில் நியூசிலாந்தை பாகிஸ்தான் வீழ்த்துவதன் மூலம் இந்தியா அரையிறுதியில் நுழைய வாய்ப்புள்ளது என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் இந்த போட்டியினை எதிர்பார்த்தனர்.

இந்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது அதிரடியாக ஆட நினைத்து களமிறங்கிய நியூசிலாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்த பந்துகளில் குறைவான ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர் முடிவுற்ற நிலையில் நியூசிலாந்து அணியின் எண்ணிக்கை 6 விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் நஷ்ரா சந்து அதிகப்படியாக 3 விக்கெட் எடுத்திருந்தார்.

அடுத்ததாக  களமிறங்கிய பாகிஸ்த்தான் அணி 111 ரன்கள் அடித்தால் வெற்றி குறைவான ரன்கள் எளிதாக அடித்துவிடலாம் என அதிரடியாக ஆட நினைத்து பாகிஸ்தான் வீராங்கனைகள்   நியூசிலாந்தின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து தனது விக்கெட்டுகளை பறி கொடுத்தனர். 12-வது ஓவரில் 56 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியா அறையிருதி செல்லும் வாய்ப்பை இழந்தது.

இந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங்கின் போது பாகிஸ்தான் வீராங்கனைகள் 8 கேட்ச்களை தவற விட்டுள்ளனர்.  இந்த போட்டி குறித்து ரசிகர்கள் கூறுகையில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இந்தியா அரையிறுதி சென்று விடும் என்று பாகிஸ்தான்  வேண்டுமென்றே தோற்றதாக கூறுகின்றனர்.