இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்!

இந்திராகாந்தியாக தலைவி பட கதாநாயகி! “Emergency”-படத்தின்  ஓர் முன்னோட்டம்!

நடிகை கங்கனா ரனாவத் தமிழில் முதன் முதலில் தாம் தூம் திரைப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்தார். தற்பொழுது தமிழக மக்களை ஈர்க்கும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். இவர் இது மட்டும் இன்றி மணிக்கருணிக்கா உள்ளிட்ட படங்களிலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில் தற்பொழுது இந்திரா காந்தியாக, எமர்ஜென்சி என்ற படத்தில் நடித்துள்ளார்.

இது இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாறு குறித்து படம் அல்ல, இந்திரா காந்தி ஆட்சியில் இருந்த போது அமல்படுத்தப்பட்ட  அவசரநிலை பிரகடனும் குறித்து தான் இந்த படம் என கூறியுள்ளனர். இந்தியாவை புரட்டி போட்ட இந்த எமர்ஜென்சி பற்றியது குறித்து தான் இப்படம் என கூறுகின்றனர். தற்பொழுது படத்தின் ப்ரோமோ இரு மாதங்களுக்கு முன் வெளியானது. அதில், நடிகை கங்கனா இந்திரா காந்திக்கு உரிதான காட்டன் புடவையில் அவரைப் போன்றே செய்கைகளுடன் நடித்திருப்பது மக்களை ஈர்த்துள்ளது.

அப்படத்தின் ப்ரோமோவில் அமெரிக்காவை சேர்ந்தவர் உங்களை சார் என்று கூப்பிடுவதற்கு பதிலாக மேடம் என்று கூப்பிடலாமா என கேட்டுள்ளார் என்பதை ஒருவர் இந்திரா காந்தியிடம் கூறுவார். அதற்கு என்னை மேடம் என்று அழைக்க கூடாது சார் என்று தான் கூப்பிட வேண்டும் என இந்திரா காந்தியின் வசனங்கள் மெய்சிலிர்க்க வைக்கிறது. இப்படத்தின் கதாநாயகியே இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் 2023 ஆம் ஆண்டு வெளியாகும் என கூறுகின்றனர்.

Leave a Comment