பாஜகவுடன் மறைமுக கூட்டணி.. உதயநிதியால் போஸ்டர் மூலம் அம்பலமான திமுகவின் நாடகம்!
தற்பொழுது ஒரு ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை ஒட்டி அனைத்து கட்சிகளும் தற்போதிலிருந்தே பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வரிசையில் பாஜக, தற்பொழுது அதிமுகவை ஒதுக்கி விட்டு ஓர் எதிர்க்கட்சியாக உருமாறி வருகிறது. இது ஒரு புறம் இருக்க மத்திய அரசின் திட்டங்களை எதிர்ப்பதாக திமுக மேடையில் கூறுகிறது. ஆனால் மறைமுகமாக மத்திய அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துதான் வருகிறது.
அந்த வகையில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தை மத்திய அரசு வேறொரு பெயரில் கொண்டு வந்தது. அது பெயர் மாற்றம் அடைந்து திமுக செயல்படுத்துவது போல் அத்திட்டம் தற்பொழுது நடைமுறையில் உள்ளது. இதே போல மத்திய அரசின் பல திட்டங்களை திமுக மறைமுகமாக ஆதரித்து வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு திட்டம் ஒன்றை செயல்படுத்தியுள்ளது. இந்த செல்வ மகள் சேமிப்பு திட்டத்தின் மூலம் குழந்தைகளின் பெயரில் பணத்தை சேமித்து வைக்கலாம்.
அவ்வாறு சேமித்து வைக்கும் பணத்திற்கு 7.6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. தற்பொழுது உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் வரவுள்ளது. அவர் பிறந்த நாளை ஒட்டி மதுரையில் ஓர் தனியார் மண்டபத்தில் மக்களுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டம் குறித்து விழிப்புணர்வு செய்யப்படுகிறது. அதுமட்டுமின்றி ஆயிரம் பெண் குழந்தைகளுக்கு திட்டத்தை தொடக்கி வைக்கவும் உள்ளனர்.
இது குறித்த மதுரை தெற்கு மாவட்டம் முழுவதும் திமுக அரசை கலாய்ப்பது போல போஸ்டர் ஒட்டி உள்ளனர். அதில், நரேந்திர மோடியின் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் கொண்டுவரப்பட்ட செல்வமகள் சேமிப்பு திட்டத்தை மக்களிடம் எடுத்து சொல்லும் திமுகவிற்கு நன்றி நன்றி என கூறி போஸ்டர் ஒட்டி உள்ளனர். இதை பார்க்கையில் பாஜக திட்டங்களை கொண்டு வர மாட்டோம் என்று கூறிவிட்டு இவர்களே அதனை செயல்படுத்துவது வேடிக்கையாக உள்ளதை சுட்டிக்காட்டி கூறியிருப்பது போல் தெரிவித்துள்ளனர். இந்த போஸ்டர் ஆனது மதுரையில் மக்களை கவரும் வகையில் உள்ளது.