மாணவர்களை தாக்கும் தொற்று.. மாற்றம் செய்யப்பட்ட பள்ளி சீருடை! மாநில அரசின் திடீர் உத்தரவு!
கொரோனா தொற்று அடுத்து தற்பொழுது டெங்கு காய்ச்சல் அதிக அளவு பாதிப்பை ஏற்படுத்துகிறது. தற்பொழுது பருவமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி அதன் மூலம் டெங்கு கொசு உருவாகின்றது. இதனால் டெங்கு காய்ச்சலானது மக்களுக்கு உருவாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்த டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் அதிக அளவு பாதிக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு விழிப்புணர்வு கொடுக்கும் வகையில் அனைத்து பள்ளிகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அறிவுரை கூறப்பட்டு வருகிறது. அந்த வகையில் இடைநிலை கல்வித்துறை, அனைத்து பள்ளி அலுவலர்களுக்கும் டெங்கு காய்ச்சல் குறித்து மாணவர்கள் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதனை விளக்கிக் கூறியுள்ளது.
அதன் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் தினம் தோறும் காலை நேரத்தில் இறை வணக்கத்திற்கு அடுத்து மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது. இவர்களோடு விட்டு விடாமல் மாணவர்களின் பெற்றோர்களுக்கும் இது குறித்து விழிப்புணர்வு செய்ய வேண்டும் என இடைநிலை கல்வி இயக்குனர் மகேந்திரதேவ் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது,தற்பொழுது வரும் டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வரும் பொழுது முழுக்கை சட்டை மற்றும் முழுக்கால் பேண்ட் அணிந்து வருமாறும் கூறியுள்ளார். அவ்வாறு வரும்பொழுது அவர்களது உடலை எந்த ஒரு கொசுவும் கடிக்காத வகையில் இருக்கும். இதனால் மாணவர்களுக்கு பெரிதளவில் பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார்.
இந்த டெங்கு காய்ச்சல் குறித்து கிராமங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இன்றி இருப்பார்கள், அவர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்க வேண்டும்.எந்தெந்த இடங்களில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு தொட்டிகள் நீர்த்தேக்க இடங்கள் உள்ளதோ அதனை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். தற்பொழுது பருவமழை என்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி விடுகின்றது அவ்வாறு தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும் படியும் கூறியுள்ளார்.