கடந்த சில தினங்களில் நோய் தொற்றுக்கு எதிரான நடவடிக்கையில் அத்தியாவசியமாக இருக்கும் மருந்துகளின் உற்பத்தி பல மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ரெம்டிசிவர் மருந்து பல லட்சம் டோஸ்கள் மாநில அரசுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திரமோடியிடம் அதிகாரிகள் விளக்கம் அளித்தார்கள்.
நேற்றைய தினம் மாலை நாட்டில் நோய் தொற்று தன்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி மத்திய அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த சமயத்தில் மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் இதுதொடர்பாக தீவிர ஆலோசனையில் பிரதமர் நரேந்திர மோடி ஈடுபட்டதாக தெரிகிறது.
மருந்து உற்பத்தி செய்பவர்கள் உடன் மத்திய அரசு தொடர்ச்சியாக ஆலோசனையில் இருந்து வருகிறது. இதனால் அவர்களும் இதற்கு நல்ல ஒத்துழைப்பை வழங்க உறுதி அளித்திருக்கிறார்கள்.வெளிநாடுகளில் இருந்து கணிசமான அளவிற்கு மருத்துவ உதவிகள் கிடைத்து வருகிறது. இந்த நிலைமையை பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு செய்து வெளிநாட்டு உதவிகளை உரிய சமயத்தில் மாநில அரசுகளுக்கு வழங்குவதை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்.
சில மாநிலங்களில் உபயோகிக்க படாமல் உபரியாக இருக்கும் வெண்டிலேட்டர்களை தேவைப்படும் மாநிலங்களுக்கு அனுப்பி வைக்குமாறு பிறந்த நரேந்திர மோடி அதிகாரிகளிடம் வலியுறுத்தி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.