தொற்று பாதிப்புகள் குறைவு! தகர்க்கப்படும் தளர்வுகள்?
கொரோனா தொற்றானது சீன நாட்டிலிருந்து உருவெடுத்து அனைத்து நாடுகளிலும் பரவி இன்றுவரை மக்களை விடாமல் துரத்துகிறது. ஒவ்வொரு வருடமும் இந்த கொரோனா தொற்றானது புதிய பரிமாற்றத்தை எடுத்து மக்களை பெருமளவு பாதிக்கிறது. முதலில்கொரோனாவாக இருந்தது நாளடைவில் டெல்டா டெல்டா பிளஸ் வகையாக மாறியது. தற்பொழுது ஒமைக்ரான் தொற்றாக மாறி உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. தற்பொழுது தான் மக்கள் இரண்டாம் அலையின் பிடியில் இருந்து விடுபட்டு தங்களின் அன்றாட வாழ்க்கையை தொடர ஆரம்பித்தனர்.
இந்த சூழலில் ஒமைக்ரான் என்ற பெயரில் மக்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தத் தொற்று பரவல் காரணமாக பல நாடுகளில் அதிக அளவு கட்டுப்பாடுகளை அமல் படுத்தி உள்ளனர். அந்த வகையில் நமது இந்தியாவில் பல மாநிலங்களில் ஊரடங்கு அமல் படுத்தி உள்ளனர். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுப்பு அளித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தத் தொற்று பாதிப்பானது நேற்றைவிட இன்று குறைந்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.
நேற்றைய முன் தினம் இந்த தொற்று பாதிப்பானது 2 லட்சத்து 71 ஆயிரத்து 202 என்ற எண்ணிக்கையில் இருந்தது.இதுவே கடந்த 24 மணி நேரத்தில் இரண்டு லட்சத்து 58 ஆயிரத்து 89 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முந்தைய தினத்தை விட நேற்றையதினம் 10,000 பாதிப்புகள் குறைந்து உள்ளது. அதேபோல கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 840 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்து குணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் தொற்று பாதிப்படைந்து குணமடைந்தார் எண்ணிக்கை மூன்று கோடிக்கும் மேல் அதிகரித்துள்ளது.
இவ்வாறு தொற்று பாதிப்பு குறைந்து வரும் போதிலும் ஓர் நாளில் மட்டும் 355 பேர் உயிரிழந்துள்ளனர். பாதிப்புகள் சற்று குறைந்த நிலையிலும் உயிரிழப்புகள் ஒருபக்கம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருந்ததால் இந்தியாவில் அனைத்து மாநில அரசுகளும் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.தற்போது தொற்று பாதுப்புகள் குறைந்த நிலையில் அமல்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளில் சில தகர்க்கப்படும் என கூறுகின்றனர்.