INDIA: பொருளாதார ரீதியாக இந்தியா பெரும் ஆபத்தை சந்திக்கும் என WEF அறிக்கை வெளியிட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் பெரும் பணக்காரர்கள் பில்லியனர்கள் கொண்டு (WEF) உலகப் பொருளாதார மன்றத்தின் கூட்டமானது நடைபெறும். அந்த வகையில் இந்த பொருளாதார மன்ற கூட்டமானது நேற்று ஸ்விட்சர்லாந்தில் நடைபெற்றுள்ளது. இதில் பணக்காரர்கள் மற்றும் பில்லியனர்கள் எப்படி அடுத்த கட்ட வருமானத்தை ஈட்டுவது என பேசிய நிலையில் WEF சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது.
அதாவது இதில் வளர்ந்து வரும் நாடுகளுக்கு பெரிய பாதிப்பு இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்த தரவுகளை திரட்ட அமெரிக்காவில் மிகப்பெரிய மற்றும் பிரபலமடைந்த ஆலிவர் வைமன் குழுவும் உதவி செய்துள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில், முன்பை காட்டிலும் உலகமானது பொருளாதார ரீதியாக பெரும் பின்னடவை சந்திக்கும். அது எந்த அளவிற்கு என்றால் 51 லட்சம் கோடி என தொடங்கி கிட்டத்தட்ட 300 லட்சம் கோடி வரை செல்ல வாய்ப்புள்ளது.
அந்த வகையில் அதன் மதிப்பு உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியில் ஐந்து சதவீத என்று குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக இது ஒவ்வொரு நாட்டின் தனிப்பட்ட கருத்து மற்றும் புதிதாக ஏற்படுத்தும் திட்டங்களால் உருவாகும். அந்த வகையில் அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதும் பொருளாதார வர்த்தக ரீதியில் கை வைத்தார். அதற்கு ஒரு சில நாடுகள் எதிர்ப்பு தெரிவிப்பது என தொடங்கி இதன் மூலம் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியில் இதனால் மாறுபாடு ஏற்படும்.
இந்த வீழ்ச்சி ஒவ்வொரு நாட்டினை பொறுத்து உண்டாகும். இந்த வீழ்ச்சியை வளர்ந்த நாடுகள் சமாளிக்கும் போது கட்டாயம் வளர்ந்து வரும் நாடான இந்தியாவால் ஏற்றுக்கொள்ள முடியாது. அச்சமயத்தில் மிகப்பெரிய வல்லரசு நாடுகளின் உதவியை நாடி இருக்கும். சொல்லப்போனால் இந்தியா இதற்காக ரஷ்யா மற்றும் அமெரிக்கா என இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்தும் பொழுது ஒட்டுமொத்தமாக இது அணிசேரா நாடகவே விளங்கும்.
இவ்வாறு இருப்பது ஆரம்பகட்ட காலத்தை விட இறுதிக்கட்டத்தில் மிகவும் நெருக்கடியை கொடுக்கும். கட்டாயம் பொருளாதார வீழ்ச்சியை சமாளிக்க ஏதோ ஒரு நாட்டை மட்டும் தேர்ந்தெடுக்கும்படியான சூழல் உண்டாகும். வரும் காலத்தில் இதுபோன்ற பொருளாதார ரீதியான பல பிரச்சனைகளை இந்தியா சந்திக்கும் என இந்த அறிக்கையின் மூலம் கூறியுள்ளனர்.