‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் !!

Photo of author

By Parthipan K

‘சூப்பர் ப்ளூ மூன்’ பற்றிய அறிய தகவல்கள் :-

 

MOON Super Blue Moon எனப்படும் எனும் வானியல் அரிய நிகழ்வு நேற்று (ஆகஸ்ட் 30) நடைபெற்றது.

 

சூப்பர் மூன் (Super Moon):- நிலவு பூமிக்கு அருகில் இருக்கும் நேரத்தில் ஏற்படும் பௌர்ணமி சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது.

 

ப்ளூ மூன் (Blue Moon):-

 

ப்ளூ மூன் என்பது நிலவு நீல நிறத்தில் தோன்றும் என்பதல்ல. இது அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்வின் சிறப்பு பெயர். பூமியின் துணைக்கோளான நிலா புவியை சுற்றிவர 29.5 நாட்களாகிறது. அதற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ஒருமுறை முழு நிலவான பவுர்ணமியும், ஒருமுறை அமாவாசையும் வரும். ஆனால், மிகவும் அரிதாக ஒரே மாதத்தில் இருமுறை பவுர்ணமி தோன்றும். அவ்வாறு ஒரே மாதத்தில் 2 முறை முழு நிலவு தோன்றும் போது, 2-வதாக வரும் முழு நிலவை ப்ளூ மூன் என்று குறிப்பிடுகின்றனர். ஒவ்வொரு ப்ளூ மூனும், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. கடைசியாக. கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ‘ப்ளூ மூன்’ நிகழ்வு நடந்தது.

 

சூப்பர் ப்ளூ மூன் (Super Blue Moon):-

சூப்பர் மூன் மற்றும் ப்ளூ மூன் இரண்டும் சேர்ந்து ஏற்படும் நிகழ்வு சூப்பர் ப்ளூ மூன் எனப்படும். இந்த சமயத்தில் நிலா மிக பெரியதாகவும். மிகப் பிரகாசமாகவும் காட்சியளிக்கும். இந்தாண்டின் மிகப்பெரிய, மிகப் பிரகாசமாக நிலவை இன்று நாம் காணலாம். இது 10 (அல்லது) 20 ஆண்டுகளுக்கு ஒருமுறையே நிகழும். அடுத்த சூப்பர் ப்ளூ மூனை 2037- ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் தான் காண முடியும். இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு அதிகபட்ச ஒளியுடன் ப்ளூ மூன் நிகழ்வு தொடங்கியதாக வானிலை வல்லுநர்கள் கூறினர்.