சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!

0
90
Information about the iconic Chitra has been released !! Heartbroken fans !!
Information about the iconic Chitra has been released !! Heartbroken fans !!

சின்னத்திரை சித்ராவை பற்றிய தகவல் வெளியாகி உள்ளது!! மனமுடைந்த ரசிகர்கள்!!

சின்னத்திரையில் நடிகர் மற்றும் நடிகைகள் உள்ளனர். ஆனால் அதில் சிலர் மட்டுமே ரசிகர்களிம் பிரபலமாக இருபார்கள்.. அவர்களில் மக்களை அதிக அளவு கவர்ந்து மற்றும் அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகை சித்ரா. இவர்  சின்னத்திரையில் பணியாற்றுவதற்கு முன்பு நிகழ்ச்சி தொகுப்பாளராக பணியாற்றினார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நிகழ்ச்சி மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார். மேலும் சித்ரா கால்ஸ் என்னும் திரைப்படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் இவருக்கு சொல்ல முடியாத அளவில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. இவர் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் தான் இவர் இவ்வளவு பிரபலம் ஆனார். அந்த சீரியலில் முல்லை என்கின்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். மேலும் மிக தைரியமான மற்றும் வாழ்க்கையில் சாதிக்க துடித்த பெண். பல கஷ்டங்களுக்கு பிறகு சினிமாவில் பெரிய அளவில் பிரபலமடைந்து அதை அனுபவித்து வந்த நேரம் அது. இதற்கு இடையில் திடீரென கடந்த வருடத்தில் ஒரு நாள் இவர் இறந்துவிட்டதாக செய்தி வந்ததை தொடர்ந்து இவரது ரசிகர்கள் ஒன்னும் புரியாமல் நின்றனர். ரசிகர்கள் மட்டுமின்றி சினத்டிரை நடிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சி. வாழ்கையில் இவ்வளவு தைரியமாக  இருக்கும் ஒரு பெண் எப்படி இறந்திருப்பார் என்ற ஒரு கேள்வி அனைவருக்குள்ளும் எழுந்தது. மேலும் இவர்  தற்கொலை செய்து கொண்டார் என மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளில் தெரியவந்துள்ளது. ஆனால் இதை மறுக்கும் குடும்பத்தினர் அவரது வருங்கால கணவர் தான் இவரை கொன்று இருப்பார் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அவரது மரணமும் இப்போது சித்ராவின் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விஷயமாகவே உள்ளது. இதுமட்டுமின்றி சின்னத்திரையில் அவருடன் பணிபுரியும் அனைவருக்குமே இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் அவ்வபோது சித்தர்களை பற்றிய ஏதாவது ஒரு தகவல்களை அவரின் ரசிகர்கள் வலைதளத்தில் வெளியிட்டு அவரைப் பற்றி ஞாபகப்படுத்திக் கொண்டு இருப்பார்கள். அந்த வகையில் தற்போது சித்ராவின் ரசிகர் ஒருவர் அவர் பயன்படுத்திய விலையுயர்ந்த காரை புகைப்படம் எடுத்து அதை இன்டர்நெட்டில் ஷேர் செய்து உள்ளார். மேலும் அந்த கார் தற்போது அவரது வீட்டில் முன்னால் நிற்க வைத்துள்ளனர். இதை ஷேர் செய்த ரசிகர், சித்ரா நம்முடன் இல்லையே என மிகவும் மனமுடைந்து பதிவு செய்துள்ளார். இதை பார்த்து ரசிகர்களும் சிறிது வருத்தத்தில் உள்ளனர்.

author avatar
CineDesk