EVKS Ilangovan: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் வாழ்க்கை பற்றி தகவல்கள்.
இன்று,ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏவும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் நுரையீரல் தொற்று காரணமாக உடல்நிலை மோசமாகி உயிரிழந்து இருக்கிறார்.இச் செய்தி காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.இவர்,பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். ஈ.வி.கே.சம்பத்தின் மகன் ஆவார்.
அவருக்கு அறிஞர் அண்ணா பெயர் சூட்டினார். 50 ஆண்டு கால அரசியல் அனுபவத்தை கொண்டு இருக்கும் இவர் முதலில் தன்னை சிவாஜி கணேசன் ரசிகராக அறிமுகம் செய்து கொண்டார். இவர் முதன் முதலில் 1984ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தரத்தில் சத்தியமங்கலம் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். எம்ஜிஆர் அவர்களின் மறைவிற்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் ஆட்சி அமைக்க தமிழக காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவைப்பட்டது.
ஆனால் அதற்கு தமிழக காங்கிரஸ் கட்சியினர் மறுப்பு தெரிவித்து இருப்பினும் அகில இந்திய காங்கிரஸ் தலைவருமான ராஜீவ் காந்தி, ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு ஆதரவு கொடுத்தார். எனவே,கட்சிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அப்போது,காங்கிரஸ் கட்சியில் இருந்த சிவாஜி கணேசன் உடன் பதவி விலகியவர்கள் இளங்கோவனும் ஒருவர் ஆவார்.
1989 ஆண்டு சிவாஜி கணேசன் உடன் சேர்ந்து அதிமுக ஜானகி அணியின் கூட்டணியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தார். இத் தேர்தலில் படும் தோல்வியை சந்தித்தார். பின்னர் 2004 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் கோபிசெட்டிபாளையம் எம்.பி யாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அக்காலக்கட்டத்தில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங் அமைச்சரவையில் பெட்ரோலியம், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சராக இருந்தார்.
அதன், பிறகு 2009 ஆம் ஆண்டு ஈரோடு, 2014 ஆம் ஆண்டு திருப்பூர் ,2019 ஆம் ஆண்டு தேனி ஆகிய மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தார். ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் தான் திருமகன் ஈவேரா ஆவார். இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
இதனால், 2023 ஆண்டு பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று காலமானார் இச் செய்தி காங்கிரஸ் கட்சியினரை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.