ADMK BJP: அதிமுக மற்றும் பாஜக கூட்டணி முடிவுக்கு முக்கிய காரணமாக அண்ணாமலை கூறப்பட்டாலும் இதற்கு பின்னணியில் வேறொரு தனிப்பட்ட பிரச்சனையும் இருக்கிறது என கமலாலய வட்டாரம் கூறுகிறது. அதாவது எடப்பாடி மற்றும் அண்ணாமலை இருவரும் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்கள். அண்ணாமலை பாஜகவில் நுழைந்ததிலிருந்து பலம் பெற்ற அரசியல்வாதியாக வளர்ந்து வருகிறார். இது எடப்பாடியின் தொழில் ரீதியான நண்பர்களின் கவனத்தை திசை திருப்புகிறதாம்.
மேற்கொண்டு இவர் சமூகத்திலேயே இவருக்கான மவுசும் குறைந்து கொண்டே வருகிறதாம். அப்படி இருக்கையில் இவரை பாஜகவிலிருந்தே நீக்க வேண்டுமென்று எண்ணி வந்துள்ளார். அப்போதுதான் அதிமுக மற்றும் மறைந்த முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சையாக பேசி அண்ணாமலை தானாகவே சிக்கினார். இந்த வாய்ப்பை விடக்கூடாது என்று எடப்பாடி தன்வசம் படுத்தி கூட்டணியை விட்டு வெளியேறினார்.
அதிமுகவின் கூட்டணி எந்த அளவிற்கு தமிழகத்தில் தேவை என்பதை உணர்ந்த பாஜக, மீண்டும் கூட்டணி அமைக்க தூது விட்டது. அந்த சமயம் பார்த்து எடப்பாடி பல கண்டிஷன்களை பாஜக மேலிடத்திற்கு போட்டார். குறிப்பாக அதில், அண்ணாமலையை கட்டாயம் தமிழக தலைமையிலிருந்து மாற்ற வேண்டும் என்ற நிபந்தனையை வைத்துள்ளார்.
இந்த பிரஷரானது அண்ணாமலை மீது போடப்பட்டு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தற்பொழுது இது ரீதியாக முடிவெடுக்கப்பட்ட பின்னர் தான் அண்ணாமலையே இதனை சூசகமாக ஒப்புக்கொண்டுள்ளார். அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கம் செய்ய இதுதான் உண்மையான காரணம் என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றனர். இது ரீதியான அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் இவருக்கு தேசிய தலையில் நல்ல பதவி காத்திருக்கிறது எனவும் கூறுகின்றனர்.