அதிமுக தவெக வை ஓரங்கட்ட அண்ணாமலை எடுக்கும் ஆயுதம்!! திமுக வுடன் கூட்டணி.. எதிர்பார்க்காத பாமக??

Photo of author

By Rupa

DMK BJP: அண்ணாமலை அரசியல் படிப்பிற்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதன் பயிற்சி காலம் மூன்று மாத காலமமென்பதால்,வரும் 28 ஆம் தேதி தமிழகம் வர உள்ளார். இவ்வாறு இருக்கையில் இந்த மூன்று மாதத்தில் அரசியல் வட்டத்தில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டது. அதிலும் குறிப்பாக விஜய் நடத்திய மாநாடானது தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. அதற்கு முக்கிய காரணம் பாஜக மற்றும் திமுக-வை நேரடியாகவே தாக்கி பேசினார்.

இவ்வாறு இருக்கையில் அண்ணாமலையின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு என்னவாக இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக திமுக கூட்டணி கட்சிகள் அங்கிருந்து வெளியேறவும் ஆலோசனை செய்து வருகின்றனர். இதனையெல்லாம் சூசகமாக மறைக்க வேண்டுமென்றே தோழமை கட்சி எங்களை பிரிக்க முடியாது என சப்புக்கட்டும் விதமாக பேசுகின்றனர்.

ஆனால் மறுபுறம் எங்களால் ஒரு போதும் ஆட்சி அதிகாரத்தில் உட்கார முடியாதென்று ஆளும் கட்சியை குத்திகாட்டியும் வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலானது அரசியல் களத்தில் கட்டாயம் பெரும் மாற்றத்தை கொண்டு வரும். குறிப்பாக நாம் தமிழர், பாமக, தமிழக வெற்றிக் கழகம் என கூட்டணி வைக்கும் பொழுது கட்டாயம் இந்தியா கூட்டணி அடி வாங்க அதிக வாய்ப்புள்ளது.

அதுமட்டுமின்றி தற்பொழுது விஜய் ஆட்சியில் பங்கு தருகிறோம் என கூறியதையடுத்து, திமுக கூட்டணி கட்சிகள் ஸ்டானிடம் குடைச்சல் கொடுத்து வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் அமலாக்கத்துறை பிடியிலிருந்து செந்தில் பாலாஜி வந்ததும் பாஜக அதிமுக நிர்வாகிகள் என பலரையும் டார்கெட் செய்து தங்களது கட்சியில் இனைத்து வருகிறார். அத்தோடு திமுக மோடியுடன் ரகசிய பேச்சுவார்த்தையில் இருப்பதாகவும், புதிய கட்சி என அனைத்தையும் எதிர்க்க அவர்களுடன் கூட்டணி வைக்க ஆலோசித்து வருவதாக கூறுகின்றனர்.

மேலும் அண்ணாமலை தமிழகம் வந்ததும் ஒரு சில நாட்களில் டெல்லி சென்று  இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் தனது கூட்டணி கட்சிகளிடமும் வேறு எங்கும் போகாமலிருக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.