நிர்மலா சீதாராமன் வெளியிட்ட தகவல்! ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கு ஐந்து லட்ச கோடி ரூபாய் செலவு !
தெலுங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டத்தில் நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின்கீழ் தெலுங்கானாவுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் ரூ 20,000 கோடி கிடைத்துள்ளது. நடப்பாண்டில் நாடு முழுவதும் மத்திய அரசு ஐந்து லட்ச ரூபாய் கோடி செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டார்.
மேலும் இந்த திட்டத்திற்கு நிதி உதவி கிடைக்கவில்லை என புகார் எழுந்தாலோ அல்லது தணிக்கை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலோ அந்தந்த மாநிலங்களுக்கு ஆய்வுக் குழுக்கள் அனுப்பப்படும் எனவும் கூறினார். ஊரக வேலை உறுதித் திட்டத்தை முடக்க இக்குழுக்கள் அனுப்பப்படுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
குறைபாடுகளை சரிசெய்ய மட்டுமே ஆய்வு குழுக்கள் அனுப்பப்படுகிறது.காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி காலத்தில் இத்திட்டத்தில் ஏராளமான குறைபாடுகள் இருகின்றது.அதனை சரிசெய்துள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு நேரடி பணம் பரிமாற்றம் மூலம் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளது.