தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!

Photo of author

By Parthipan K

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!

Parthipan K

Information published by Tamil Nadu Transport Corporation! They are directly appointed!

தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!

தமிழ்நாடு போக்குவரத்து கழகங்கள் மூலம் தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு இன்றியமையாத பொது போக்குவரத்து சேவைகள் வழங்கப்படுகின்றது.தற்போது அரசு போக்குவரத்து கழகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. அரசு விரைவு போக்குவரத்துக்கழகம் தமிழ்நாடு லிமிடெட்டில் 685 ஓட்டுனர் உடன் நடத்துனர் பணியிடங்கள், கும்பகோணம் லிமிடெட்டில் 122 ஓட்டுனர் பணியிடங்களை அலுவலகம்  மற்றும் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்து நிரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசு விரைவு போக்குவரத்துகழகம் மேலாண் இயக்குனரால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை வயது, கல்வித்தகுதி மற்றும் பிற தகுதிகள் கொண்ட நபர்களின் மூப்பு பட்டியல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்தும் பெறப்படும். மேலும் ஓட்டுனர் உடன் நடத்துனர் மற்றும் ஓட்டுனர் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் அந்தந்த போக்குவரத்துக் கழகங்களால் செய்தித்தாள் மூலமாக விளம்பரம் செய்யப்பட்டு தகுதிவாய்ந்த நபர்களிடம் இருந்து  இணையவழியில் விண்ணப்பங்கள் பெறப்படும். மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களில் இருந்து தகுதி வாய்ந்த நபர்களை தேர்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது.