ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் வெளியிட்ட தகவல்! ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனைக்கு தேதி வெளியீடு!
ரயில்வே துறையில் தொழில்நுட்பம் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிவிப்பு வெளியானது. ரயில்வே தேர்வு வாரியம், ரயில்வே துறையில் சுமார் 35 ஆயிரத்து 208 தொழில்நுட்பம் அல்லாத பணிகளுக்கு வேலைவாய்பை அறிவித்திருந்தது.கடந்த மார்ச் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது.
இந்தியாவில் ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் கடந்த 2019 ஆம் ஆண்டு NTPC பணியிடத்திற்கு ஆட்சேர்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் முதல் கட்ட கணினி வழி தேர்வு, இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு மற்றும் டைப்பிங் ஸ்கில் டெஸ்ட், கணினி அடிப்படையிலான, திறன் தேர்வு, ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ சான்றிதழ் போன்ற தேர்வு மூலம் தேர்வு செய்யபடுவார்கள்.
மேலும் முதல் கட்டமாக கணினி வழி தேர்வு இரண்டாம் கட்ட கணினி வழி தேர்வு சோதனை கணினி அடிப்படையிலான திறன் தேர்வு போன்றவற்றை நடந்து முடிந்துள்ளது.அதனை தொடர்ந்து தற்போது ஆவண சரிபார்ப்பு மற்றும் மருத்துவ பரிசோதனை தேர்வுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தற்போது தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு வரும் பிப்ரவரி ஆறாம் தேதி முதல் பத்தாம் தேதி வரை நடைபெற உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.