சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை!

Photo of author

By Parthipan K

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை!

Parthipan K

Information released by Chennai Meteorological Department! 4 consecutive days of rain!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! தொடர்ந்து 4 நாட்கள் மழை!

கடந்த டிசம்பர் மாதத்தில் வங்க கடல் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலை கொண்டு புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்டஸ் என்று  பெயர் வைக்கப்பட்டது. அந்த புயலின்  காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய இடங்களில் கன மழை பெய்து வந்தது. மேலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்தது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது. அதைத்தொடர்ந்து ஜனவரி மாதத்தின் முதலில் மழையின் தாக்கம் குறைய தொடங்கியது. இந்நிலையில் தற்போது தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடக்க சுழற்சி காரணமாக இன்று முதல் வரும் திங்கள்கிழமை வரை நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில்  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடக்கு சுழற்சி காரணமாக நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு  மேகமூட்டத்துடன்  காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி முதல் 34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி முதல் 25 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்க கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.