சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! மீனவர்களே எச்சரிக்கை 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் சூறைக்காற்று!
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்து தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்று. அந்த புயலிற்கு மாண்டஸ் என பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக புதுச்சேரி காரைக்கால் மற்றும் தமிழக பகுதிகளில் கனமழை பெய்தது.
மேலும் கனமழை பெய்த பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த அந்தந்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டனர். மேலும் தமிழகத்தில் கனமழையின் காரணமாக ஒரு சில பகுதிகள் பலத்த சேதம் அடைந்தது. சேதமடைந்த பகுதிகளுக்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அரசு அறிவிப்பை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த மாதங்களில் மழையின் தாக்கம் சற்று குறைய தொடங்கியது. மேலும் நேற்று காலை முதல் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் சாரல் மலையாக விட்டுவிட்டு பெய்து வந்தது. இந்நிலையில் குமரி கடல் பகுதிகளில் மார்ச் 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் 55 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீச கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் சூறைக்காற்று வீச இருப்பதினால் மீனவர்கள் அந்த நேரத்தில் கடலுக்கு செல்ல வேண்டாம். அதனைத் தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று மற்றும் நாளை என இரண்டு நாட்களுக்கு வட வானிலை காணப்படுவதால் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபடு காரணமாக தென் தமிழக மாவட்டங்களில் சனிக்கிழமை ஒரு சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழை வரை பெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.