சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவல்! இந்தப் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை!
தமிழகத்தில் கடந்த 2022 டிசம்பர் மாதம் வங்க கடலில் தென்கிழக்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது புயலாக வலுப்பெற்றது. அந்த புயலுக்கு மாண்ட்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டது. அந்த மாண்டஸ் புயலின் காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்ததால் ஒரு சில பகுதிகள் சேதம் அடைந்தது.
அதனைத் தொடர்ந்து ஜனவரி மாதத்தில் தான் மழையின் தாக்கம் குறைய தொடங்கி வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளில் கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாக இன்று முதல் சனிக்கிழமை வரை நான்கு நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்து வானிலை ஆய்வு மையம் நேற்று கூறுகையில் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்று மாறுபாடு காரணமாகத்தான் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யக்கூடும்.
சென்னை புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமுத்துடன் காணப்படும். சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸ் வரையிலும் குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸ் அளவிலும் இருக்கு கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.