தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 

Photo of author

By Parthipan K

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி! 

Parthipan K

Information released by Devasam Board! Good news for Sabarimala devotees!

தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு மகிழ்ச்சி செய்தி!

உலகில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்று சபரிமலை.கேரளா மாநிலத்தில் உள்ள சபரிமலை கோவிலுக்கு வெளிநாட்டு மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்கதர்கள் மாலை அணிந்து வருவார்கள்.குறிப்பாக இந்த கார்த்திகை மாதத்தில் தான் அதிக அளவு மாலை அணிந்து செல்வது வழக்கம்.

அய்யப்பன் கோவிலில் காலகாலமாக பின்பற்றி வரும் வழிமுறைகளில் ஒன்று 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் மாலை அணியவோ அல்லது கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்யவோ அனுமதி இல்லை.

அதனை எதிர்த்து பல்வேறு போராட்டங்கள் நடந்தது.கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக கோவில்கள் திறக்கப்படவில்லை.இந்நிலையில் நடப்பாண்டில் தான் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் கோவில்களுக்கும் திறக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் கடந்த வாரம் புதன் கிழமை மாலை ஆறு மணிக்கு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது.அதனால் பக்தர்கள் மாலை அணிய தொடங்கி உள்ளனர். இந்நிலையில் தேவசம் போர்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் கடந்த 17 ஆம் தேதி முதல் கோவிலில் ஐயப்பன் கோவிலில் நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதி வருகின்றது.

அதனால் சபரி மலை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு அதிகாலை 4 மணிக்கு பதில் 3 மணிக்கும் மாலை 4 மணிக்கு திறக்கப்படும் நடை முன்னதாக 3 மணிக்கும் திறக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.