தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்! சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைப்பு!
பக்தர்கள் அதிகளவு மாலை அணிந்து செல்லும் கோவில்களில் ஒன்றாக இருப்பது கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோவில்.இங்கு ஆண்டுதோறும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம் தான்.ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அதிகளவில் அனுமதிக்கவில்லை.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு தான் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மகர விளக்கு பூஜைக்காக நவம்பர் மாதம் நடை திறக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து முதல் நாளில் இருந்தே நாளொன்றுக்கு ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.இந்த வருடம் பக்தர்கள் அனைவருக்கும் ஆன்லைன் முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. அவ்வாறு முன்பதிவு செய்ய இயலாத பக்தர்களுக்கு ஸ்பாட் புக்கிங் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி மகரவிளக்கு ஜோதி முடிந்த பிறகு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது.
தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகின்றது.அதனால் ஜனவரி 19 ஆம் தேதி வரை சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுகிறது.மேலும் பக்தர்கள் வருகை குறைந்து வருவதின் காரணமாக சாமி தரிசனம் செய்யும் நேரம் குறைக்கப்பட்டுள்ளது.அதன்படி அதிகாலை 5 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும்,மாலை ஐந்து மணி முதல் இரவு 11 மணி வரை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.ஜனவரி 20 ஆம் தேதி கோவில் நடை அடைக்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்துள்ளது.