தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்! 

Photo of author

By Parthipan K

தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவல்! இனி யார் எங்கிருந்து வேண்டுமானாலும் வாக்களிக்கலாம்!

தேர்தல் ஆணையம் அனைவரும் அவரவர்களின் வாக்குகளை பதிவு செய்ய வேண்டும் என அதற்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.அந்த வகையில் கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 67.4 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டது.அப்போது 30 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்யவில்லை என தெரிவிக்கப்பட்டது.

மேலும் பணி மற்றும் இதர காரணங்களால் பல்வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்து வசித்து வருவோர் தங்களின் சொந்த மாநிலத்தில் தேர்தல்களில் வாக்களிக்க ஏதுவாக  இருக்கும் வகையில் எம் 3 மின்னணு வாக்குபதிவு எந்திரங்களை வரும் தேர்தலில் பயன்படுத்துவது குறித்து தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தி வருகின்றது.

அந்த ஆலோசனை கூட்டம் மூலமாக புலம் பெயர்ந்த வாக்காளர்கள், வாக்குப்பதிவுக்காக தங்களுடைய சொந்த மாநிலங்களுக்கு செல்லாமல் இருக்கும் இடங்களில் இருந்தே தொலைதூர வாக்களிப்பு மின்னணு எந்திரங்கள் மூலம் வாக்களிக்க இந்த நடைமுறை வழிவக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கான மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தின் மாதிரியுடன் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றது.வரும் ஜனவரி 16 ஆம் தேதி ஆலோசனை கூட்டத்தை நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.மேலும் அங்கீகரிக்கப்பட்ட 8 தேசிய கட்சிகள் 57 மாநில கட்சிகளுக்கு இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.இந்த கூட்டத்தில் பங்கேற்குமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.