அரசு எண்ணெய் நிறுவனம் வெளியிட்ட தகவல்! இதுவரை அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து!
அரசு எண்ணெய் நிறுவனங்களானது தற்போது முடிவு ஒன்றை எடுத்துள்ளது.அந்த முடிவின் படி நாட்டில் அதிகரித்து வரக்கூடிய கேஸ் சிலிண்டரின் விலைகள் பற்றிதான்.அந்தவகையில் இனிமேல் கேஸ் சிலிண்டர் வாங்க வேண்டும் என்றால் அதற்கு கூடுதலாக பணம் செலவழிக்க வேண்டும்.
அந்தவகையில் எல்பிஜி சிலிண்டருக்கு கொடுக்கப்பட்ட தள்ளுபடிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.அதனால் இனி எல்பிஜி கேஸ் முன்பதிவு செய்வதற்கு கூடுதலாக பணம் செலவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
அரசு எண்ணெய் நிறுவனங்களானது வணிக கேஸ் சிலிண்டர்களுக்கு ரூபாய் 200 முதல் ரூ 300 வரை தள்ளுபடி அளிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அந்த சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
வணிக சிலிண்டர்களுக்கு அதிக அளவு தள்ளுபடி அளிப்பதாக விற்பனையாளர்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.அதனால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த முடிவானது கடந்த நவம்பர் 8ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.