தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

Photo of author

By Parthipan K

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

Parthipan K

Information released by the Tamil Nadu Government Staff Selection Commission! Group 4 exam result release month!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட தகவல்! குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வெளியாகும் மாதம் வெளியீடு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த அறிவிப்பில் நடப்பாண்டில் குரூப் 4 போட்டி தேர்விற்கு 7,301 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது.அதனை அடுத்து தமிழகம் முழுவதும் கடந்த ஜூலை 24 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வை சுமார் 18 லட்சம் பேர் தேர்வு எழுதினார்கள்.மேலும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்ட படி நடப்பாண்டில் அக்டோபர் மாதமே இந்த தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.மகளிர் இட ஒதுக்கீட்டில் நீதிமன்றம் பிறபித்த உத்தரவின் பெயரில் திருத்தம் செய்யப்பட முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.அதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டது அந்த அறிவிப்பில் டிசம்பர் மாதம் தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் முடிவுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டு வந்த நிலையில் ஜனவரி மாதம் இதற்கான முடிவுகள் வெளியிடப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ள முடிவுகளுக்கான தகவலின் படி 7301 பணியிடங்களுக்கான குரூப் 4 போட்டி தேர்வு முடிவுகள் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியிடப்படும் என அறிவித்துள்ளது.