திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

0
190
Information released by Tirupati Devasthanam! Darshan tickets for these are released online!
Information released by Tirupati Devasthanam! Darshan tickets for these are released online!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட தகவல்! இவர்களுக்கான தரிசன டிக்கெட் ஆன்லைனில் வெளியீடு!

மிகவும் புகழ்பெற்ற தளங்களில் ஒன்று திருப்பதி ஏழுமலையான் கோவில்.இங்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.அதற்காக அண்மையில் தான் 300 ரூபாய் டோக்கன் மற்றும்,இலவச டோக்கன்கள் மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

மேலும் கடந்த புரட்டாசி மாதத்தில் இருந்து மக்களின் கூட்டம் அலைமோதுகின்றது.அப்போது காத்திருப்பவர்களுக்கு உணவு ,தண்ணீர் ,டீ போன்ற அனைத்து ஏற்பாடுகளையும் தேவஸ்தானம் செய்திருந்தது.

இந்த நிலையில் திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் திருப்பதி  ஏழுமலையான் கோவிலில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தரசினம் செய்ய ஏதுவாக இருக்கும் வகையில் நாளை காலை 10 மணிக்கு ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது.

இந்த தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான இணையதளத்தில் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வேண்டும்.என திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.திருப்பதியில் நேற்று 69,587 பேர் சுவாமி தரிசனம் செய்தனர் என கூறப்படுகின்ற்றது.

Previous articleஆன்லைன் விளையாட்டுக்கு ஜிஎஸ்டி அதிரடி உயர்வு! அதிர்ச்சியில் பயனர்கள்!
Next articleமதுபிரியர்களுக்கு அதிர்ச்சி செய்தி! தொடர் 6 நாட்களுக்கு மதுபான கடைகள் இயங்காது!