பாரதிராஜாவின் உண்மை முகம் பேட்டியில் வெளிவந்த தகவல்!! அதிர்ச்ச்சியில் ரசிகர்கள்!! 

0
37
Information revealed in Bharathiraja's true face interview!! Fans in shock!!
Information revealed in Bharathiraja's true face interview!! Fans in shock!!

பாரதிராஜாவின் உண்மை முகம் பேட்டியில் வெளிவந்த தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

பாரதிராஜா தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் திரைப்பட நடிகர். இவர் பெருபாலும் நாட்டுப்புறக் கதைகளத்தை கொண்ட படங்களை அதிகம் இயக்குவார் . இவர் கிராமங்களில் நடக்கும் நிகழ்வுகளை நல்ல படமாக  மாற்றுவதால் இவர் தனி புகழ் பெற்றார். இவர் பத்மஸ்ரீ , தேசிய மற்றும் மாநில விருதுகளையும் பல விருதுகளை பெற்றுள்ளார்.

இவர் முதலில் 16 வயதினிலே என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின் 1965 ஆம் ஆண்டுகளிலிருந்து தற்போது வரை சினிமா துறையில் புகழ் பெற்று வலம் வருகிறார். இந்த  நிலையில் இருளும் ஒளியும் என்ற திரைப்படத்தில் பாரதிராஜா உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார். அந்த படத்தின் இயக்குனராக எஸ். ஆர். புட்டனா உள்ளார். இதனை தொடர்ந்து இந்த படத்திற்கு ஏற்கனவே ஒரு உதவி இயக்குனரும் உள்ளார். இதனால் அந்த உதவி  இயக்குனர் பாரதிராஜாவை எந்த ஒரு வேலையும் செய்ய விடவில்லை.

இதனையடுத்து ஒரு நாள் வெளியே படப்பிடிப்பு நடைபெற இருந்தது. அதற்கு கிளம்பிக் கொண்டு இருந்த பாரதிராஜாவை அந்த உதவி இயக்குனர் 25 ரூபாய் பணம் தந்தால் மட்டுமே படபிடிப்பிற்க்கு கூட்டி செல்வோம் என்று கூறியுள்ளார். அதற்க்கு பாரதிராஜா என்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று கூறியுள்ளார்.

அதனையடுத்து அந்த உதவி இயக்குனர் அவரை படப்பிடிப்பிற்கு அழைத்துச்செல்லாமல் விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இந்த நிலையில் அடுத்த நாள்  படப்பிடிப்பிற்கு வந்த பாரதிராஜாவிடம் இயக்குனர் நீங்கள் வெளியே நடக்கும் படப்பிடிப்பிற்கு வர மாட்டிங்களா என்று கேட்டுள்ளார். அதற்கு பதலளித்த பாரதிராஜா அந்த உதவி இயக்குனர் பணம் கேட்டதை கூறியுள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த இயக்குனர் உடனடியாக  அந்த உதவி இயக்குனரை அடித்துள்ளார். இந்த நிகழ்வை பாரதிராஜா ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்

author avatar
Jeevitha