INFOSYS JOB: Infosys CEO சலீல் பரேக், Davos 2026 உலக பொருளாதாரக் கருத்தரங்கில், FY27-ல் நிறுவனம் 20,000 புதிய பட்டதாரிகளை வேலைக்கு எடுக்கும் திட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அவர் கூறுவதன்படி, , மென்பொருள் மேம்பாடு, வாடிக்கையாளர் சேவை மற்றும் பழைய செயலிகளை (legacy applications) புதுப்பிப்பதில் AI-ஐப் பயன்படுத்துவதால் புதிய சேவை தேவைகள் அதிகரித்து வருகின்றன. Infosys, AI-முதல் (AI-first) திறன்கள் கொண்ட freshers-ஐ கவர்வதற்காக entry-level சம்பளங்களை உயர்த்தி, சில சிறப்பு தொழில்நுட்ப துறைகளில் ஆண்டிற்கு ₹21 லட்சம் வரை வழங்கி வருகிறது.
பல வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் AI திட்டங்கள் PoC நிலையை கடந்து production-ல் deployed ஆகி பயன்படுத்தப்படுகின்றன. AI எஜென்ட்கள் மற்றும் மனித குழுக்கள் இணைந்து வேலை செய்யும் திட்டங்களில் புதிய விலை மாதிரிகள் உருவாகி வருகின்றன. பரேக் கூறியதாவது, அமெரிக்காவின் வலுவான GDP வளர்ச்சி பெரிய நிறுவனங்களில் தொழில்நுட்ப முதலீடுகளை ஊக்குவிக்க வாய்ப்பாக உள்ளது. Infosys தற்போது AI வளர்ச்சியை மையமாக்கி, புதிய சேவை வாய்ப்புகளையும் வேலை வாய்ப்புகளையும் விரிவாக்கி வருகிறது.