மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது!

Photo of author

By Hasini

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது!

தற்போது உள்ள சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பதே பெரிய விசயமாக உள்ளது.ஆனாலும் சில பேர் தங்கள் வரைக்கும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றனர்.அதிலும் சிலபேர் பிறரின் கஷ்டங்களை தனக்கு சாதகமான மாற்றி கொள்கின்றனர்.

சென்னையை சேர்ந்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது52).இவருடைய மனைவி (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002 ம் ஆண்டு முதல் வெள்ளைக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து கடை நடத்தி கொண்டுள்ளனர்.

சமீப நாட்களில் அந்த கடையில் சளி மற்றும் காய்ச்சலோடு வருவோருக்கு கணவன் மற்றும் மனைவி இருவரும் ஊசி போடுவதாக வந்த தகவலால் பள்ளிக்கரனை போலீசார் அதிர்ந்து போயினர்.

இதை தொடர்ந்து பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரவீன் ராஜேஷ் தலைமையில்,போலீசார் அந்த கடையை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.அந்த கடையில் உடல்நிலை சரி இல்லாத காரணத்திற்காக ஊசி போட்டதை கண்டுப்பிடித்து கணவன், மனைவி இருவரையும் கைது செய்தனர்.

அதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.