சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி!!

Photo of author

By Sakthi

 

சாகசம் செய்வதற்காக 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம்….புகைப்படம் எடுக்கும் பொழுது கீழே தவறி விழந்து பலி…

 

சாகசம் செய்ய வேண்டும் என்று நினைத்து 68 மாடிகள் கொண்ட கட்டிடத்தில் ஏறிய இன்ஸ்டா பிரபலம் தவறி கீழே விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 30 வயதான ரெமி லூசிடி என்பவர் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளில் ஈடுபாடு கொண்டவர். ரெமி லூசிடி அவர்கள் சாகசங்கள் நிறைந்த விளையாட்டுகளில் மட்டும் ஈடுபாடு கொண்டவர் கிடையாது. உயரமான கட்டிங்களின் சுவர்களில் ஏறி புகைப்படங்களை எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வந்துள்ளார்.

 

ரெமி லூசிடி அவர்களுக்கு சமூகவலைதளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமல் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹாங்காங் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு உள்ள டிரெகண்டர் டவர் என்னும் உயரமான கட்டிடத்தில் ஏறி புகைப்படம் எடுக்க சென்றார்.

 

இதற்காக லிப்ட் மூலமாக 48வது மாடிக்கு ரெமி லூசிடி அவர்கள் சென்றார். 48வது மாடியில் உள்ள ஆபத்தான சில இடங்களில் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறிய ரெமி லூசிடி 48வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

 

48வது மாடியில் இருந்து கீழே விழுந்த ரெமி லூசிடி அவர்களை அங்கு பணிபுரிந்து வந்த பெண் ஒருவர் பார்த்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் ரெமி லூசிடி அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மருத்துவமனையில் ரெமி லூசிடி அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ரெமி லூசிடி அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். ரெமி லூசிடி விழுந்த இடத்தில் அவருடைய கேமரா மற்றும் பாஸ்போர்ட் காவல் துறைக்கு கிடைத்துள்ளது. இதை வைத்து ரெமி லூசிடி அவர்களின் உடல் அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது. ரெமி லூசிடி அவர்களின் மறைவு அவருடைய இன்ஸ்டாகிராம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.