16 வயது சிறுவனுடன் திரையரங்குக்குச் சென்ற 5ம் வகுப்பு மாணவி! இறுதியில் நடைபெற்ற சோகம்!

Photo of author

By Sakthi

16 வயது சிறுவனுடன் திரையரங்குக்குச் சென்ற 5ம் வகுப்பு மாணவி! இறுதியில் நடைபெற்ற சோகம்!

Sakthi

இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான 16 வயது மாணவனுடன் 5ம் வகுப்பு படிக்கும் மாணவி மாயமானது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கேரள மாநிலம் கண்ணூர் நகரின் மையப் பகுதியில் ஒரு தனியார் பள்ளியில் ஏராளமான மாணவ, மாணவிகள், படித்து வந்தவர்கள். இந்தப் பள்ளியில் அந்த பகுதியைச் சார்ந்த 10 வயதான ஒரு மாணவி 5ம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு உடல்நிலை குறைவு காரணமாக, நாளைக்கு பள்ளிக்கு வர முடியாது என்று வகுப்பு ஆசிரியரின் கைபேசிக்கு மாணவி குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார்.

ஆனால் நேற்று வழக்கம் போல காலை வீட்டிலிருந்து புறப்பட்டு அந்த மாணவி பள்ளிக்கு சென்றிருக்கிறார். பள்ளிக்கு முன்பு வேனிலிருந்து இறங்கிய மாணவியை அதன்பிறகு காணவில்லை.

இந்த மாணவி பள்ளி பேருந்தில் வந்ததை மற்றொரு மாணவி பார்த்திருக்கிறார். அவர் இது தொடர்பாக வகுப்பு ஆசிரியரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த தகவலை கேட்டு அதிர்ந்த ஆசிரியை பள்ளி முழுவதும் மாணவியை தேடி பார்த்தும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற காரணத்தால், பெற்றோருக்கு தகவல் தெரிவித்து விட்டு காவல் துறையிடம் புகார் வழங்கினார்.

காவல்துறையினர் விசாரணையில் இறங்கிய சூழ்நிலையில், கண்ணூர் நகரில் இருக்கின்ற அனைத்து கண்காணிப்பு கேமராவிலும் பதிவான காட்சிகளை காவல்துறையினர் பரிசோதித்தனர்.

பல மணிநேர பரிசோதனைக்கு பிறகு 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுவனுடன் மாணவி அங்கிருக்கின்ற ஒரு திரையரங்குக்கு சென்றது தெரியவந்தது. உடனடியாக காவல்துறையினர் சம்பந்தப்பட்ட திரையரங்குக்கு விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து விசாரணை செய்தனர்.

விசாரணையில் மாணவியுடன் திரையரங்கில் வைத்து பிடிபட்ட அந்த 16 வயது சிறுவன் திருவனந்தபுரத்தை சார்ந்தவன் என்பது தெரிய வந்திருக்கிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறுவனுடன் இன்ஸ்டாகிராம் மூலமாக மாணவிக்கு பழக்கம் உண்டாகி இருக்கிறது.

இருவரும் பல மாதங்களாக இன்ஸ்டாகிராமில் பழகி வந்துள்ளனர். கடைசியாக இருவரும் ஒருவரை ஒருவர் சந்திக்க திட்டமிட்டனர் இதனைத் தொடர்ந்து பள்ளி மாணவியை சந்திப்பதற்காக சிறுவன் திருவனந்தபுரத்திலிருந்து கண்ணூருக்கு கிளம்பினான்.

செலவுக்கு பணம் இல்லாததான் காரணமாக வீட்டில் வளர்த்து வந்த முயல்களை விற்று அதன் மூலமாக கிடைக்கப்பெற்ற பணத்தில் தொடர் வண்டியில் ஏறி அந்த சிறுவன் கண்ணூருக்கு வந்திருக்கிறான். நேற்று காலை பள்ளியின் முன்பு காத்திருந்த சிறுவன் அந்த மாணவியை சந்தித்து பிறகு அங்கு இருக்கின்ற திரையரங்குக்கு சென்று இருக்கிறான்.

பள்ளி சீருடையுடன் திரையரங்குக்கு சென்றால் சிக்கிக் கொள்வோம் என்பதை அறிந்த மாணவி திரையரங்கின் கழிவறையில் வைத்து வீட்டிலிருந்து தயாராக கொண்டு வந்த வேறு உடையை மாற்றி இருக்கிறார்.

இருவரையும் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று பெற்றோரை வரவழைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.