பாஸ்போர்ட் தொடர்பான சிக்கல்களுக்கு உடனடி தீர்வு! புதிய திட்டம் அறிமுகம்!
இந்தியாவில் வசிக்கும் பொது மக்களுக்கு வெளியுறவு அமைச்சகத்தின் மூலமாக சர்வதேச பயண நோக்கத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகின்றது.ஒரு பாஸ்போர்ட் பெற்ற நாளில் இருந்து பத்து ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகும்.இந்த பாஸ்போர்டை காலாவதி தேதி முடிவடையும் முன்னதாகவே புதுபித்து கொள்ள வேண்டும்.
இந்நிலையில் சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் சார்பில் பாஸ்போர்ட் தொடர்பாக குறைகளுக்கு விரைவில் தீர்வு காண்பதற்கு வசதியாக இருக்க உங்கள் பாஸ்போர்ட் அதிகாரியை சந்திக்கவும் என புதிய திட்டம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் பாஸ்போர்ட் பெறுவதில் தாமதம், சிக்கல் போன்ற குறைகளுக்கு பொதுமக்கள் சென்னையில் உள்ள மண்டல பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளை ஒவ்வொரு வாரமும் வரும் செவ்வாய்கிழமைகளில் பகல் 12 மணி முதல் மதியம் 1 மணி வரை முன் அனுமதி இன்றி நேரில் சந்தித்து அவரிடம் குறைகளை தெரிவித்து அதற்கான நிவாரணம் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் பாஸ்போர்ட்டில் ஏற்படும் சிக்கலுக்கு உடனுக்குடன் தீர்வு காண முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.