ஒரே ஒரு முறை பாலிசி எடுத்தால் போதும்! மாதம் வருமானம் வரும் எப்படி தெரியுமா?

Photo of author

By Sakthi

காப்பீடு என்பது எதிர்காலத்திற்கான ஒரு பாதுகாப்பு ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும்போது அல்லது தீவிரமான உடல்நல பாதிப்பு அல்லது விபத்து உண்டாகும் பொழுது அதற்குரிய காப்பீடு இருந்தால் பொருளாதார அல்லது நிதி நெருக்கடியை மிகவும் எளிதாக எதிர்கொள்ள முடியும்.

ஒரு குடும்பத்தில் வருமானம் ஈட்டுபவர் திடீரென்று இறந்து விட்டால் அவருடைய குடும்பத்தின் எதிர்காலம் என்னவாகும் என்ற நிலை ஏற்பட்டுவிடும். அந்த சமயத்தில் ஆயுள் காப்பீடு இருந்தால் அதிலிருந்து கிடைக்கும் கணிசமான தொகை குடும்பத்திற்கு பொருளாதார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு உதவிகரமாக இருக்கும்.

அதேபோன்று மருத்துவ காப்பீடு, எதிர்கால கல்விக்கான காப்பீடு, குறிப்பிட்ட நோய்களுக்கு மற்றும் விபத்துகளுக்கு காப்பீடு என்று பலவகையான பாலிசிகள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் insurance production policy என்று சொல்லப்படும் உங்கள் வருமானத்திற்கு உத்தரவாதமளிக்கும் ஒரு காப்பீடு.

இந்த காப்பீடு புதிதாக இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் இது பலரும் அறிந்த ஒரு பாலிசியின் மற்றொரு வடிவம் தான் என சொல்லப்படுகிறது.

டெர்ம் இன்சூரன்ஸ் பாலிசி என்பது ஒரு குறிப்பிட்ட வருடங்களுக்கு எடுக்கக்கூடிய பாலிஸியாகும் இந்த பாலிசியின் படி பாலிசி வாங்கும் நபருக்கு ஏதாவது அசம்பாவிதம் நடைபெறும் போது பாலிசி எடுத்த சபையை 2 விதமாக தன்னுடைய நாமினி அல்லது குடும்பத்தாருக்கு வழங்குமாறு தெரிவிக்கலாம்.

பொதுவாக ஆயுள் காப்பீடு எடுத்த ஒரு நபர் உயிரிழக்கும் போது காப்பீடு தொகை அவருடைய குடும்பத்தினருக்கு முழுமையாக வழங்கப்படும். ஆனால் இந்த பாலிசியின் படி மொத்தமாக காப்பீட்டு தொகையை வழங்குவதற்கு பதிலாக காப்பீட்டு தொகையை 2 பகுதிகளாக பிரித்து ஒரு பகுதியை ரொக்கமாகவும், மற்றொரு பகுதியை மாதம் வருமானமாகவும், இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கும்.

ஆகவே இந்த திட்டத்தில் மாதாந்திர வருமானமும் கிடைக்கும் வாரிசு பெற்றவர் இறந்த பிறகு குடும்பத்திற்கு கணிசமான ரொக்க தொகையும் கிடைக்கும் என்கிறார்கள்.

டெர்ம் லைஃப் இன்சூரன்ஸ் ஐ பொறுத்த வரையில் இதில் காப்பீட்டு முதிர்ச்சியடையும் நன்மைகள் எதுவுமே இருக்காது. அதாவது இந்த இன்சூரன்ஸ் ஐ 15 வருடங்களுக்கு பெற்றால் 18 ஆண்டுகளுக்குள் பாலிசி பெற்றவர் இறந்து விட்டால் அல்லது அவருக்கு வருமானம் ஈட்ட முடியவில்லை என்ற சூழ்நிலை உண்டானால் தான் காப்பீட்டு தொகையை பெற முடியும்.

15 வருடங்களுக்குள் அப்படி எதுவும் அசம்பாவிதம் நடைபெறவில்லை மற்றும் பாலிசிதாரர் ஆரோக்கியமாக இருக்கிறார். என்றால் 15 வருடங்களுக்குப் பிறகு காப்பீடு முதிர்ச்சி அடைந்த பின்னர் முதிர்ச்சித் தொகை அல்லது நன்மைகள் எதுவும் கிடைக்காது.

பாலிசிதாரர் உயிரிழந்த பிறகு குடும்பத்திற்கு ரொக்கமாக எவ்வளவு தொகை வழங்க வேண்டும் மற்றும் எத்தனை மாதங்கள் அல்லது எத்தனை ஆண்டுகளுக்கு என்ன மாதாந்திர வருமானம் வழங்க வேண்டும் என்பதையும் குறிப்பிடும் அம்சம் இதில் இருக்கிறது.

ஒரு நபர் 50 லட்சத்திற்கு இன்சூரன்ஸ் பாலிசியை 20 வருடங்களுக்கு எடுக்கிறார் என்று வைத்துக் கொண்டால் 20 ஆண்டுகளுக்குள் அவர் இறந்துவிட்டால் 50 லட்சம் காப்பீட்டுத் தொகையை காப்பீட்டு நிறுவனம் வழங்கும்.

அந்த காப்பீட்டு தொகையை 25 லட்சம் ரொக்க தொகையாகவும் மீதமிருக்கின்ற 25 லட்சம் 10 வருடங்களுக்கு பிரித்து மாத மாதம் எவ்வளவு வருமானம் என்று வழங்க வேண்டும் என்பதை பாலிசிதாரர் நிறுவனத்திற்கு தெரிவிக்கலாம்.

அதோடு பாலிசிதாரர் உயிரிழக்கும் போது எவ்வளவு பாலிசி மீதம் இருக்கிறது என்பதனடிப்படையிலும் இது நிர்ணயம் செய்யப்படுகிறது.