இந்தியாவில் இன்சூரன்ஸ் பாலிசிகளை வாங்குவது மக்களிடையே அதிகரித்தாலும், பலர் முழுமையான தகவல் இல்லாமல் ஏஜென்ட்களின் வலுக்கட்டாயத்திற்குள் சிக்கி, தேவையற்ற பாலிசிகளை வாங்கி வருகிறார்கள். “பாலிசி தெரியாமல் எடுத்து விட்டேன் அதை எப்படி திருப்பிக் கொடுக்கலாம்?” என்ற கேள்வி பலருக்கும் அதிகமாக எழுகிறது.
பாலிசியை வாங்கியதும் அது வேண்டாம் எனத் தெரிந்தால், பல நிறுவனங்கள் ‘பிரீ லுக் பீரியட்’ ( Pre look Period) என்ற அறிய வாய்ப்பை வழங்குகின்றன.
ஏஜென்ட் வழியாக வாங்கினால்: 15 நாட்கள், ஆன்லைன் வழியாக வாங்கினால்: 30 நாட்கள் என, இந்த காலத்திற்குள், ஏதாவது காரணத்தால் பாலிசியை திருப்பிக் கொடுத்தால், எந்த அபராதமும் இல்லாமல் பணம் திரும்ப கிடைக்கும்.
ஒரு சில ஆண்டுகளுக்குப் பிறகு பாலிசியை வேண்டாம் என்று முடிவு செய்தால், ‘சரண்டர்’ செய்யும் வசதியும் உண்டு. ஆனால், இதற்கு முன்னர் இருந்த கடுமையான விதி என்னவென்றால், மூன்று ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால் எந்த பணமும் கிடைக்காது என்பதே.
தற்போது, IRDAI (இந்திய காப்பீடு மேம்பாட்டு ஆணையம்) ஒரு புதிய விதியை அறிவித்துள்ளது, அதன்படி ஒரு ஆண்டு பிரீமியம் மட்டுமே கட்டியிருந்தால்கூட, சரண்டர் மதிப்பு வழங்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளது. பாலிசி எடுப்பதற்கு முன், இந்த பாலிசி உங்களுக்கு பொருத்தமா? நீண்ட கால கட்டணத்தைச் கட்ட முடியுமா? என்று, யோசித்த பின்னரே பாலிசி எடுக்க இந்திய காப்பீடு மேம்பாட்டு ஆணையம் பரிந்துரைக்கிறது.