மக்களை மிகவும் அசிங்கமாக விமர்சித்து திமுகவினர் தொடர்ந்து பேசி வருகிறார்கள் என்கிற விமர்சனம் பல வருடங்களாக திமுகவின் மீது இருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை ஜெயலலிதாவாக இருந்தால் இதுபோன்ற விஷயங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுப்பார். எனவே, அதிமுக அமைச்சர்கள் மிகவும் கவனமாக பேசுவார்கள். ஆனால், திமுகவில் அப்படி இல்லை. குறைந்த பட்சம் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பதவியை பறிப்பார்கள். அதிக எதிர்ப்பு வந்தால் சம்பிராதயத்திற்கு மன்னிப்பு அல்லது வருத்தம் மட்டும் தெரிவிப்பர்கள். இதுதான் திமுகவில் காலம் காலமாக இருக்கும் நடைமுறை.
சமீபத்தில் சைவம், வைணவம் என பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் பொன்முடி. ஏற்கனவே, திமுக அரசு மகளிருக்கு இலவச பயணம் கொடுத்ததை ஓசி என பேசி எதிர்ப்பை பெற்றார். பட்டியலின பெண் ஊராட்சி ஒன்றிய தலைவரின் சாதி குறித்து கேட்டதாக இவர் மீது சர்ச்சை எழுந்தது. ஒருமுறை தொகுதிக்கு போன போது சில கோரிக்கைகள் பற்றி பெண்கள் அவரிடம் பேச ‘நீங்களாம் எனக்கு ஓட்டு போட்டு கிழிச்சீங்களா?’ என கடிந்துகொண்டார். இப்போது கடந்த 6ம் தேதி சைவம், வைணவம் என பெண்கள் குறித்து ஆபாசமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். எனவே, இவரிடமிருந்து துணை பொதுச்செயலாளர் பதவியை இப்போது ஸ்டாலின் பறித்திருக்கிறார்.
துணை பொதுச்செயலாளர் பதவியை பறித்தால் மட்டும் போதுமா?.. அதிலென்ன பாதிப்பு இருக்கிறது. அவரின் அமைச்சர் பதவியை பறிக்க வேண்டும். குறைந்தது. ஒரு வருடத்திற்கு அவரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என பத்திரிக்கையாளர் சொல்லி வருகிறார்கள். பொன்முடியின் பேச்சால் மக்களின் கோபம் திமுக மீது திரும்பியிருக்கிறது. பொன்முடிக்கு எதிரான போராட்டம் தீவிரம் அடையாமல் இருக்க அமைச்சர் பதவியில் இருந்து அவரை நிக்க வேண்டும் என அரசுக்கு உளவுத்துறை அறிக்கை அளித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுவே ஜெயலலிதாவாக இருந்திருந்தால் அமைச்சர் பதவியை பறித்திருப்பார். ஆனால், திமுகவில் அது நடக்காது. ஸ்டாலின் என்ன செய்யப்போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.