மக்கள் மனங்களை கவரும், மாற்றத்தை ஏற்படுத்தும் மற்றொரு திட்டத்துடன் மத்திய அரசு முன் வந்துள்ளது. லக்பதி திதி யோஜனா – இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் தங்கள் வாழ்க்கையை ஒரு புதிய உயரத்திற்கு கொண்டு செல்வதற்கான வாய்ப்பை பெறுகிறார்கள்.
இந்த திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் வரை வட்டியில்லா கடன் வழங்கப்படுகிறது. குறிக்கோள் ஒன்றே – பெண்களுக்கு அதிகாரம் அளித்து, அவர்களின் பொருளாதார முன்னேற்றத்தை உறுதி செய்வது. அரசின் இந்த யோஜனையின் மூலம் ஏழை, நடுத்தர மற்றும் கிராமப்புற மகளிருக்கு ஒரு புதிய வழி துவங்கப்பட்டுள்ளது.
அனைத்து துறைகளிலும் பெண்கள் முன்னேற வேண்டிய அவசியத்தை மத்திய அரசு புரிந்துகொண்டு இந்த திட்டத்தை செயல்படுத்தியது. கடந்த 2023 ஆகஸ்ட் 15 அன்று தொடங்கப்பட்ட இந்த திட்டம், ஒரு பெண் தனது சொந்த தொழிலை துவங்கி, பொருளாதார சுதந்திரம் பெற வழிவகுக்கும் மாபெரும் முயற்சியாக பார்க்கப்படுகிறது.
இந்த திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்:
கிராமப்புறங்களில் வாழும் பெண்களாக இருக்க வேண்டும் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினராக உள்ளவர்கள் தொழில் தொடங்க விரும்பும் பெண்கள் வட்டியில்லா கடன் பெறும் வழிமுறை லக்பதி திதி திட்டத்தின் அடிப்படை விதி இதுதான். முதலில், ஒரு சுயஉதவிக்குழுவில் இணைவது அவசியம்.
அந்த குழுவில் இணைந்த பிறகு, உங்கள் தொழில் கனவை ஒரு திட்டமாக மாற்றுங்கள். அதன் பின்வணிகத் திட்டத்தை அரசு அதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் பரிசீலித்து அங்கீகரிக்கப்பட்டவுடன், ₹5 லட்சம் வரை வட்டியில்லா கடன் உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது பெண்களுக்கு வணிக திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் வழங்குகிறது. இந்த பயிற்சிகள் மூலம், அவர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும். இதன் மூலம், தொழில் தொடங்குவதற்கு மட்டுமல்ல, அதை வெற்றிகரமாக நடத்துவதற்கும் வழிகாட்டப்படும்.
இந்த திட்டம் பெண்களின் பொருளாதார சுதந்திரத்தை உறுதி செய்யும், வறுமையில் இருந்து மேம்படுத்தும், குடும்பத்தில் பெண்களின் மதிப்பை உயர்த்தும், கிராமப்புறங்களில் தொழில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். லக்பதி திதி யோஜனா திட்டம் பெண்களுக்கு மட்டும் இல்லை; இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் ஒரு முக்கிய அடித்தளம். இந்த திட்டத்தின் மூலம், பெண்கள் யாரையும் சாராமல் தங்கள் கனவுகளை நிறைவேற்றி, எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள முடியும்.