8 மாதங்களாகியும் வராத வட்டி!! 7 கோடி ஊழியர்கள் தவிப்பு!!

Photo of author

By Gayathri

நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு செய்தி மற்றும் வெளியாகியுள்ளது.

வருங்கால வைப்பு நிதிக்கு பொதுவாக வழங்கப்படும் வட்டி பணம் 8 மாதங்கள் ஆகியும் இன்னும் வழங்கப்படாமல் இருக்கிறது.கடந்த சில நாட்களுக்கு முன்தான் பிஎப் கணக்கிற்கான வட்டிப் பணத்தை அரசு விரைவில் வங்கி கணக்கில் செலுத்தும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில் 8 மாதங்கள் ஆகியும் வட்டி பணம் தொழிலாளர்களுடைய வங்கி கணக்கில் போடப்படவில்லை. இந்த வட்டி பணத்தினால் 7 கோடி ஊழியர்கள் பயன்பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த பிப்ரவரியில், ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) டெபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை 8.15 சதவீதத்தில் இருந்து 8.25 சதவீதமாக உயர்த்தியது.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் மாதந்தோறும் வட்டி கணக்கெடுக்கப்பட்டு, நிதியாண்டின் குறிப்பிட்ட சில மாதங்களில் வழங்கப்படும் என தெரிவித்திருந்தது. மேலும் இந்த செயல்முறையானது பைப்லைனில் உள்ளது, விரைவில் அங்கு காண்பிக்கப்படும். வட்டி வரவு வைக்கப்படும் போதெல்லாம், அது முழுமையாக செலுத்தப்படும். வட்டி இழப்பு ஏற்படாது என்றும் கூறப்பட்டிருக்கிறது.

உங்கள் இபிஎஃப் கணக்கில் 1 லட்சம் ரூபாய் பிஎஃப் ஆக டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அதற்கு வட்டியாக 8.25 ஆயிரம் ரூபாய் வரும். இதுதான் கணக்கு. அதிகபட்சம் இன்னும் 10 நாட்களில் இந்த பணம் வரவு வைக்கப்படும் என்ற தகவலும் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.