பெண்களுக்கு வட்டி மேல் வட்டி.. தமிழக அரசின் புதிய திட்டம்!! உடனே அப்பளை பண்ணுங்க!!

Photo of author

By Divya

பெண்களுக்கு வட்டி மேல் வட்டி.. தமிழக அரசின் புதிய திட்டம்!! உடனே அப்பளை பண்ணுங்க!!

மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை 2023 செப்டம்பர் மாதம் 15 அன்று முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தொடங்கிவைத்தார்.இந்த திட்டத்தின் மூலம் சுமார் 1 கோடியே 13 லட்சம் பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.

தற்பொழுது தகுதி வாய்ந்த பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து ஏற்கனவே நிராகரிக்கப்பட்டவர்கள்,புதிதாக திருமணமானவர்கள்,புதிய ரேசன் கார்டு பெற்றவர்கள் அனைவரும் அருகில் உள்ள நகராட்சி, மாநகராட்சி,ஊராட்சி அலுவலகங்களில் சென்று மகளிர் உரிமத்தை தொகை திட்டத்தில் பயன்பெற விண்ணப்பம் செய்யலாம்.

தங்கள் குடும்பத்திற்காக வாழ்நாள் முழுவதும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் உழைப்புக்கு அங்கீகாரம் கொடுக்கும் விதமாக மகளிர் உரிமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில் இந்த திட்டத்தின் வாயிலாக கூடுதல் வட்டி கிடைக்கும் வகையில் தமிழக அரசு ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.1000 வழங்கப்படுகிறது.இந்த தொகையை மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் 7.5% வட்டி கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்திருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டத்தில் தொடங்கி வைத்த இந்த திட்டத்தில் முதலீடு செய்ய பெண்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.இதர வங்கி திட்டத்தில் முதலீடு செய்தால் குறைந்த வட்டி மட்டுமே கிடைக்கும்.ஆனால் கூட்டுறவு வங்கியில் செயல்பட்டு வரும் மலையரசி தொடர் வைப்புத் திட்டத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி கிடைக்கும்.