தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Photo of author

By Parthipan K

தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

Parthipan K

Interest rate hike on personal loans and other loans? Reserve Bank announced!

தனிநபர் கடன் மற்றும் இதர கடன்களின் வட்டி உயர்வு? ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பு!

ரிசர்வ் வங்கி கடந்த சில மாதங்களாக பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காக வங்கிகளுக்கு அளிக்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டியை உயர்த்தி வருகிறது. இந்நிலையில் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு கூட்டம் வரும் மூன்றாம் தேதி நடைப்பெறவுள்ளது.

அந்த கூட்டத்தில் மீண்டும் ரெபோ ரேட் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வட்டி உயர்வு அறிவிப்பு இடம்பெறாது என பாரத ஸ்டேட் வங்கியின் ஆராய்ச்சி பிரிவான எஸ்.பி.ஐ ரிசர்ச் தெரிவித்துள்ளது. ரிசர்ச் தற்போது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அந்த அறிவிப்பில் நவம்பர் மூன்றாம் தேதி நடைபெறும் கூட்டம் வழக்கமான கூட்டமாக இருக்கும் .அதில் எந்த முடிவுகளும் அறிவிக்கப்படாது.

டிசம்பர் மாத மத்தியில் ரெபோ ரேட்டை 0.5சதவீதம் முதல் 0.75 சதவீதம் வரை உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டு வருகிறது.மேலும் இறுதியாக 0.5 சதவீதம் உயர்த்தப்பட வாய்ப்புள்ளது. இந்த ரெபோ ரேட் உயர்வால் வாடிக்கையாளர்கள் பெற்ற வீட்டுக்கடன் ,வாகன கடன் ,தனிநபர் கடன் ஆகியவற்றுக்கான வட்டியும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது