UIIC நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? மாதம் ரூ.88,000/- ஊதியம் கிடைக்கும்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்.. Don’t miss it!!

0
89
#image_title

UIIC நிறுவனத்தில் பணிபுரிய விருப்பமா? மாதம் ரூ.88,000/- ஊதியம் கிடைக்கும்! விண்ணப்பம் செய்ய இன்றே இறுதி நாள்.. Don’t miss it!!

இந்தியாவில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான United India Insurance Company Limited (UIIC) நிறுவனத்தில் காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.அதன்படி காலியாக உள்ள சட்ட வல்லுநர்,நிதி வல்லுநர்,நிறுவனத்தின் செயலாளர்,மருத்துவர்கள்,பொறியாளர்கள் (சிவில்/ ஆட்டோமொபைல்/ மெக்கானிக்கல்/ எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ்/ ECE/ கணினி அறிவியல்/ தகவல் தொழில்நுட்பம்/ தகவல் அறிவியல்),விவசாய நிபுணர் பதவிகளுக்கு ஆர்வமும்,தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்று அதாவது 14/09/2023 வரை விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: United India Insurance Company Limited (UIIC)

பதவி:

சட்ட வல்லுநர்,நிதி வல்லுநர்,நிறுவனத்தின் செயலாளர்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,விவசாய நிபுணர்.

காலியிடங்கள்: இப்பதவிகளுக்கு மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி: Bachelor’s Degree in law,Master’s degree in law,Chartered Accountant (ICAI) / Cost Accountant (ICWA),BCom, M.Com,Degree,MBBS / BAMS / BHMS,B.Tech. / BE,M.Tech. / ME

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது 21 மற்றும் அதிகபட்ச வயது 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதியம்: இப்பதவிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.88,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*ஆன்லைன் எழுத்து தேர்வு

*நேர்காணல் (Interview)

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்

சட்ட வல்லுநர்,நிதி வல்லுநர்,நிறுவனத்தின் செயலாளர்,மருத்துவர்கள்,பொறியாளர்கள்,விவசாய நிபுணர் உள்ளிட்ட பதவிகளுக்கு தகுதி,விருப்பம் இருக்கும் நபர்கள் https://www. uiic.co.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுகவும்.அதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து முறையான சான்றிதழ்களுடன் ஆன்லைன் வழியாக அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 14-09-2023

Previous articleதொடர் சர்ச்சையில் சிக்கும் திமுக : அடுத்து என்ன?
Next articleநடிகர் அருண்பாண்டியன் இவ்வளவு பெரிய கோடீஸ்வரரா?