கங்குவா படத்தில் நடிக்க இதுதான் காரணம்!! சூர்யா கூறிய சுவாரஸ்ய தகவல்!!

0
228
Interesting information given by Surya
Interesting information given by Surya

Suriya: கங்குவா படத்தில் நடிப்பதற்க்கான காரணத்தை பற்றி நிகழ்ச்சி ஒன்றில் சுவாரஸ்யமாக கூறியுள்ளார்.

தமிழகத்தின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடைசியாக திரையரங்கில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன் அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக எந்த திரைப்படமும் வெளியாகவில்லை.இதற்கெல்லாம் ஈடு காட்டும் வகையில் கங்குவா திரைப்படம் வெளியாக உள்ளது.

வருகின்ற நவம்பர் 14ம் தேதி கங்கு திரைப்படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படமானது 10 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ள நிலையில் AI மூலம் அனைத்து மொழிகளிலும் சூர்யாவின் வாய்ஸ் பயன்படுத்தபட்டுள்ளது படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த திரைப்படத்தின் ரிலீசுக்கு குறைந்த நாட்களே உள்ள நிலையில்  பிரமோசன்கள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் 26 ம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிக பிரம்மாண்டமாக  நடைபெற உள்ளது. தற்போது சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷன் கள் படக்குழுவினர் நடத்தி வருகின்றனர்.

இதில் இந்த படத்தில் நடிக்க என்ன காரணம் என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா இந்த படத்தில் நடிக்க காரணம் இந்த திரைப்படத்தின் வெளிப்பாடு தான், மேலும் விஷுவல் விருந்தாக இந்த திரைப்படம் இருக்கும். இதற்கான லவ் ரசிகர்களிடம் இருந்து கிடைக்கும் என்றும் கூறியிருந்தார்.

Previous article  முதலில் உடல் எடையை பாருங்கள் பிறகு விளையாட வாருங்கள்!! வீரரை வெளியேற்றிய மும்பை அணி!!
Next articleஉங்கள் அக்குளில் அதிக வாடை வருகிறதா? இனி காசுப்போட்டு பெர்பியூம் வாங்க தேவையில்லை!! இதை யூஸ் பண்ணுங்க!!