குழந்தைகள் தினத்தில் உள்ள சுவாரசிய தகவல்கள்! ஏன் இந்த தினம் சிறப்பு மிக்கதாக உள்ளது நாமும் அறிந்து கொள்வோம்!
குழந்தைகள் தினம் குழந்தைகளுக்காகவே அர்ப்பணிக்கப்பட்ட நாளாக கருதப்படுகின்றது.குழந்தைகள் தினம் ஆண்டு தோறும் நவம்பர் 14ஆம் தேதி அன்று கொண்டாடப்படுகின்றது.
குழந்தைகள் தினம் கொண்டாடப்பட காரணம் இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த பண்டிட் ஜவஹர்லால் நேருவின் பிறந்தநாள் தான்.இவர் குழந்தைகளை மிகவும் நேசிப்பார்.குழந்தைகள் மத்தியில் மிகவும் புகழ்பெற்றவராக இருந்தவர்.இவரை சாச்சா நேரு என்றும் அழைத்தனர்.மேலும் இந்த ஆண்டு குழந்தைகள் தினம் இன்று கொண்டாடப்படுகின்றது.
குழந்தைகள் தினத்தின் முக்கியத்துவம்:
இன்று குழந்தைகள் நாட்டின் எதிர்காலம் ,குழந்தைகளின் உரிமை மற்றும் அவர்கள் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் அவை மிக அவசியம் என்று அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகின்றது.நேரு மட்டுமே குழந்தைகளுக்கு தரமான கல்வி கிடைக்க வேண்டும் என குழந்தைகளை பற்றி மட்டுமே நினைத்தவர்.
அதனால் தான் அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் ,இந்திய தொழில்நுட்பக் கழகம்,இந்திய மேலாண்மை நிறுவனங்கள் மற்றும் தேசிய தொழில் நுட்ப நிறுவனங்கள் உருவானது.இன்றைய குழந்தைகள் நாளைய எதிர்காலம் என எண்ணற்ற வாசகங்கள் குழந்தைகளுக்கென உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் நேரு கூறுகையில் குழந்தைகளை எவ்வாறு வளகின்றமோ அதுபோல தான் நம் நாட்டின் எதிர்காலம் அமையும் என்றார்.1956 ஆம் ஆண்டு முதல் நவம்பர் 20ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையின் படி உலகம் முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்பட்டது.
அதனையடுத்து 1964 ஆம் ஆண்டு பண்டிட் நேருவின் மறைவுக்கு பிறகு அவருடைய பிறந்த நாளை நினைவுகூரும் வகையில் இந்தியாவில் குழந்தை தினத்தின் கொண்டாட்டம் மாற்றியமைக்கப்பட்டது.அன்றைய தினத்தில் இருந்து நவம்பர் 14ஆம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தைகள் தினத்தன்று பள்ளிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். ஆசிரியர்கள் மாணவர்களுக்கு இனிப்பு வழங்கி அவரவர்களின் மகிழ்ச்சியை வெளிபடுத்துவார்கள்.மேலும் பள்ளிகளில் மாணவர்களுக்கு போட்டிகள் நடைபெறும் அந்த போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.