உட்கட்சி மோதல்: சேலம் பாமக MLA பதவி விலகல்.. வெளியான பரபர அறிவிப்பு!!

0
10
Internal conflict: Salem PMK MLA resigns.
Internal conflict: Salem PMK MLA resigns.

PMK : பாமகவில் அப்பா மகனுக்கிடையே உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில் நிர்வாகிகள் அனைவரும் செய்வதறியாது உள்ளனர். இதில் ராமதாஸ் தனி செய்தியாளர்கள் சந்திப்பு வைத்து அன்புமணி என்னவெல்லாம் மறைமுகமாக செய்து வருகிறார் என்பது குறித்து பேசியுள்ளார். இதனிடையே அன்புமணியும் தனியாக பொதுக்குழு கூட்டம் ஒன்றை நடத்தி வருகிறார்.

இதில் பெரும்பாலானோர் அன்புமணிக்கு ஆதரவு தெரிவித்தாலும் மூத்த நிர்வாகிகள் பலர் தந்தை மற்றும் மகன் இருவரும் ஒன்று சேர வேண்டும் என நினைக்கின்றனர். அந்த வகையில் சேலம் மாவட்டத்தின் பாமக எம்எல்ஏ அருள் ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பா மகன் இருவரும் மோதல் போக்கை கைவிடவில்லை என்றால் மேற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏ-வாக உள்ள நான் பதவி ராஜினாமா செய்ய போவதாக கூறியுள்ளார்.

இவரின் இந்த அறிவிப்பு மற்ற நிர்வாகிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவெளியில் செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி பல பொய்களை பேசுபவர், அம்மா வையே அடிக்க வந்தவர், எனக்கு எதிராக செயல்பட நினைக்கிறார் என இவர் கூறியது கட்சி நிர்வாகளிடையே அதிருத்தியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிரச்சனை என்றால் அவர்களுக்குள் பேசி முடிக்காமல் பொதுவெளி வரை கொண்டு வரலாமா அது தலைமைக்கு அழகா?? என கேள்வி எழுப்புகின்றனர்.

Previous articleபோக்குவரத்து ஊழியர்களின் கவனத்திற்கு….அமைச்சர் எஸ் எஸ் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்!
Next articleராமதாஸ் உயிருக்கு பெரும் ஆபத்து.. ஸ்கெட்ச் போடும் அன்புமணி பொண்டாட்டி!! அலர்ட் செய்த மணிகண்டன்!!